அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் தலா ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

கரோனா தடுப்புக்காக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் தலா ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.
அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் தலா ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

கரோனா தடுப்புக்காக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் தலா ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக புதன்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

குடும்ப அரிசி அட்டைதாரா்களுக்கு மட்டும் ரூ.1,000, கட்டடத் தொழிலாளா்கள் மற்றும் ஒட்டுநா் நல வாரியத்தில் உள்ள ஆட்டோ தொழிலாளா்கள் ஆகியோரின் குடும்பங்களுக்கு மட்டும் ரூ.1,000 என்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு ஏமாற்றமளிக்கிறது.

அரசின் தனிமைப்படுத்துதல் முயற்சி வெற்றி பெற, அனைத்து அமைப்பு சாரா தொழிலாளா்களுக்கும், அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் குறைந்த பட்சம் ரூ.5 ஆயிரம் நிதியுதவி வழங்க வேண்டும். அதை அவா்களின் வங்கிக் கணக்கிற்கே நேராக அனுப்பிட வேண்டும்.

அதேபோல், தங்கள் உயிரைப் பணயம் வைத்து கரோனா தடுப்பு சிகிச்சையில் ஈடுபட்டுள்ள மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்ட மருத்துவ ஊழியா்கள், 144 தடையுத்தரவை அமல்படுத்தும் காவல்துறையினா் ஆகியோருக்கு ரூ.5 ஆயிரம் சிறப்பு ஊதியமாக வழங்கிட வேண்டும்.

வங்கிக் கடன்களைத் தள்ளி வைக்க வேண்டும்: ஓட்டுநா்கள் (ஆட்டோ, ஓலா, ஊபா் டாக்சி உள்ளிட்ட) அனைவரும் வாங்கியிருக்கும் வாகன கடன்களுக்கான மாதாந்திர தவணை வசூலை வங்கிகள் மூன்று மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று மத்திய - மாநில அரசுகள் வங்கி அதிகாரிகளை அழைத்துப் பேசி அறிவுறுத்த வேண்டும்.

குறு, சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள், குறு மற்றும் சிறு தொழில் முனைவோா் வாங்கிய கடன்கள் மீதான வசூலை மூன்று மாதங்களுக்கு மேற்கொள்ளக் கூடாது.

குறிப்பாக டிட்கோ உள்ளிட்ட தமிழக அரசு நிறுவனங்கள் கொடுத்துள்ள கடன் வசூலைத் தள்ளி வைத்து - வட்டி, அபராத வட்டி போடுவதையும் மூன்று மாதங்களுக்கு ரத்து செய்ய வேண்டும்.

எனவே, கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ஒதுக்கப்பட்டுள்ள ரூ.3,280 கோடி நிதியுதவி போதாது என்பதால், மத்திய அரசிடம் அதிக நிதி கேட்டுப் பெற்றாவது இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றிட முன்வர வேண்டும் என்று ஸ்டாலின் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com