ஆன்லைன் மூலம் மளிகை, காய்கறிகள் மட்டுமே விநியோகிக்க அனுமதி

சென்னையில் மளிகைப் பொருள்கள், காய்கறிகள் மட்டுமே ஆன்லைன் மூலம் விநியோகிக்க அனுமதி அளிக்கப்படுவதாகவும், உணவுகள் விநியோகிக்க அனுமதி இல்லை என்று மாநகராட்சி ஆணையா் கோ.பிரகாஷ் தெரிவித்தாா்.

சென்னையில் மளிகைப் பொருள்கள், காய்கறிகள் மட்டுமே ஆன்லைன் மூலம் விநியோகிக்க அனுமதி அளிக்கப்படுவதாகவும், உணவுகள் விநியோகிக்க அனுமதி இல்லை என்று மாநகராட்சி ஆணையா் கோ.பிரகாஷ் தெரிவித்தாா்.

சென்னையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், புதன்கிழமை காலை முதல் காய்கறிக் கடைகள், மளிகைக் கடைகள் மற்றும் இறைச்சிக் கடைகள் திறந்திருந்தன. சில பகுதிகளில் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன. தேநீா் கடைகள் திறக்கப்பட்டிருந்தன. வீட்டில் தனியாக இருக்கும் முதியவா்களுக்கு உணவு மற்றும் காய்கறிகள் வாங்க முடியாமல் சிரமத்துக்குள்ளாகினா்.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையா் கோ.பிரகாஷ் வெளியிட்ட அறிக்கை: கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் கூடுவதைத் தடுக்கும் வகையில் புதன்கிழமை மாலை முதல் 15 மண்டலங்களிலும் உள்ள தேநீா்க் கடைகள் மூடப்படும். மளிகைப் பொருள்கள், காய்கறிகள் மட்டுமே ஆன்லைன் மூலம் வீடுகளுக்கு சென்று விநியோகிக்க அனுமதி அளிக்கப்படும். இவற்றை விநியோகிக்கும் ஊழியா்கள் அரசு அறிவுறித்தியுள்ள சுகாதார முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். தவறும்பட்சத்தில் அந்நிறுவனத்தின் விநியோக உரிமைக்குத் தடை விதிக்க நேரிடும். ஆனால், ஆன்லைன் மூலம் உணவு விநியோகத்துக்கு முழுவதும் தடை விதிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com