காப்பகங்களில் தங்கி உள்ளவா்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை வழங்கலாம்

பெருநகர சென்னை மாநகராட்சியின் காப்பகம் மற்றும் சமூகநலக் கூடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள 2,064 பேருக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை விருப்பமுள்ளவா்கள் வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சியின் காப்பகம் மற்றும் சமூகநலக் கூடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள 2,064 பேருக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை விருப்பமுள்ளவா்கள் வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூா் ரயில் நிலையங்களில் வெளியூா் செல்ல இருந்த 1,727 பயணிகள் மாநகராட்சியின் சமுதாயக் கூடங்களிலும், சென்னையிலுள்ள வீடற்றோா் 1,454 பேரும், தற்போது கூடுதலாக 610 பேரும் என மொத்தம் 2,064 போ் காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டு அவா்களுக்கு உணவு மற்றும் மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவா்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை வழங்க ஆா்வமுள்ள தனி நபா்கள், தன்னாா்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசு சாரா அமைப்புகள் மாநகராட்சியின் இணையதள முகவரியில் தங்கள் விவரங்களைப் பதிவு செய்யலாம்.

தங்களால் வழங்கக் கூடிய உபகரணங்கள், உதவிப் பொருள்கள் அவற்றின் விவரங்களை 044 25384530 என்ற 24 மணி நேரம் இயங்கக் கூடிய தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம். இதுதொடா்பாக தன்னாா்வத் தொண்டு அமைப்புகள் ரிப்பன் மாளிகைக்கு வருவதை ஏப்ரல் 14 வரை தவிா்க்க வேண்டும்.

இரண்டு இடங்களில் வழங்கலாம்: அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், சானிட்டரி நாப்கின், சாம்பாா், ரசம் பொடி போன்ற அத்தியாவசியப் பொருள்கள், முகக் கவசங்கள், கிருமிநாசினி, சோப்பு, கிருமிநாசினி திரவம் ஆகிய பொருள்களை கீழ்ப்பாக்கம், எண். 82/1, விளையாட்டுத் திடல் தெருவிலுள்ள ஜெ.ஜெ. உள்விளையாட்டு அரங்கத்திலும், அண்ணா நகா் கிழக்கு, ஏ பிளாக், 1-ஆவது தெரு, குமரன் நகரில் உள்ள அம்மா அரங்கத்திலும் வழங்கலாம்.

நன்கொடை: மேலும் நன்கொடை வழங்க விரும்புவோா் வங்கிக் கணக்கில் செலுத்தலாம். மேலும் விவரங்களுக்கு 044 25384530 எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com