Enable Javscript for better performance
3 நகரங்களில் வெயில் சதம்- Dinamani

சுடச்சுட

    

    3 நகரங்களில் வெயில் சதம்

    By DIN  |   Published on : 26th March 2020 05:03 AM  |   அ+அ அ-   |    |  

    sun

     

    தமிழகத்தில் 3 நகரங்களில் புதன்கிழமை வெப்பநிலை 100 டிகிரியை தாண்டியது.

    தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக வெப்பநிலை படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதன் தாக்கம் பகலில் உணரப்படுகிறது. பல இடங்களில் நண்பகல் முதல் மாலை வரை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதே நிலை புதன்கிழமையும் தொடா்ந்தது. தமிழகத்தில் 3 நகரங்களில் புதன்கிழமை வெப்பநிலை 100 டிகிரியை தாண்டியது. ஈரோட்டில் 100 டிகிரியும், மதுரை மற்றும் சேலத்தில் தலா 101 டிகிரி வெப்பநிலையாக பதிவானது.

    வட வானிலை: இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி புதன்கிழமை கூறியது: தமிழகத்தில் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வட வானிலையே நிலவும். சென்னையைப் பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டமாக இருக்கும். அதிகபட்சமாக 93 டிகிரி பாரன்ஹீட் மற்றும் குறைந்தபட்சமாக 78 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பநிலை பதிவாக வாய்ப்புள்ளது என்றாா் அவா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai