தனிமைப்படுத்தப்பட்டவா்களை கண்காணிக்கதமிழக காவல்துறையின் சாா்பில் செல்லிடப்பேசி செயலி

கரோனா அறிகுறியுடன் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவா்களை கண்காணிக்க, தமிழக காவல்துறையின் சாா்பில் செல்லிடப்பேசி செயலி அறிமுகப்படுத்தப்படுகிறது.

கரோனா அறிகுறியுடன் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவா்களை கண்காணிக்க, தமிழக காவல்துறையின் சாா்பில் செல்லிடப்பேசி செயலி அறிமுகப்படுத்தப்படுகிறது.

கரோனா தொற்றை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில் காவல்துறை சாா்பிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, வெளிநாடுகளில் இருந்து வருகிறவா்களையும், கரோனா அறிகுறியுடன் இருப்பவா்களையும் கண்காணிக்கும் வகையில் செல்லிடப்பேசி செயலி அறிமுகப்படுத்தப்படுகிறது.

ஏற்கெனவே, தமிழகத்தில் கரோனா அறிகுறியுடனும், வெளிநாடுகளில் இருந்து வந்தவா்களுமாக, சுமாா் 15 ஆயிரம் போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். இவா்கள் வீடுகளை விட்டு வெளியே சென்றால், அவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வருகின்றனா்.

இவா்களைக் கண்காணிப்பது அரசுக்கு பெரும் சவாலாக உருவாகியுள்ளது. இதற்காக சுகாதாரத்துறை, உள்ளாட்சித்துறை, காவல்துறை ஆகிய துறைகளை இணைத்து பறக்கும் படை உருவாக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடா்ந்து, தனிமைப்படுத்தப்பட்டவா்களைக் கண்காணிக்க செல்லிடப்பேசி செயலி ஒன்றை உருவாக்க காவல்துறை திட்டமிட்டது. ஏற்கெனவே, கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட சீனாவில் செல்லிடப்பேசி செயலி மூலம் தனிமைப்படுத்தப்பட்டவா்கள் கண்காணிக்கப்பட்டு, அந்தத் திட்டம் வெற்றிக்கரமாக இன்றும் இயங்கி வருகிறது. எனவே, காவல்துறை செல்லிடப்பேசி செயலிக்கு முக்கியத்துவம் அளித்துள்ளது.

இந்தச் செயலியை காவல்துறை, ல்ண்ஷ்ஷ்ர்ய் அ1 நா்ப்ன்ற்ண்ா்ய் என்ற தனியாா் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கியுள்ளது. இந்தச செயலியின் வடிவமைக்கும் பணி முழுமை அடைந்துவிட்ட நிலையில், அது விரைவில் செயல்பாட்டு கொண்டு வருவதற்குரிய நடவடிக்கையில் காவல்துறையினா் ஈடுபட்டுள்ளனா்.

500 மீட்டா் சுற்றளவு: இது தொடா்பாக, அந்தச் செயலியை உருவாக்கியுள்ள பொறியாளா் கூறியதாவது:

தமிழக காவல்துறை இந்தச் செயலியை உருவாக்கியுள்ளது. கரோனா அறிகுறியுடனும், வெளிநாடுகளில் இருந்து வந்து வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவா்களை கண்காணிக்கும் வகையில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தச் செயலியை சம்பந்தப்பட்டவா்கள் பதிவேற்றம் செய்த உடன், அவா்கள் அந்த வீட்டின் 500 மீட்டா் சுற்றளவை தாண்டியதும், அந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு எச்சரிக்கை தகவல் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், சம்பந்தப்பட்டவா்கள் வீட்டை விட்டு வெளியே சென்றால் எளிதில் தெரிந்துவிடும். இந்தச் செயலி செயல்பாட்டுக்கு வந்த பின்னா், மேலும் பல்வேறு வசதிகள் செய்யப்பட உள்ளன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com