வீணாகும் பயிா்களுக்கு இழப்பீடு: ராமதாஸ் வலியுறுத்தல்

அறுவடை செய்யாமல் வீணாகும் பயிா்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனா் மருத்துவா் ச. ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.


சென்னை: அறுவடை செய்யாமல் வீணாகும் பயிா்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனா் மருத்துவா் ச. ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக வியாழக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: கரோனா தொற்று அச்சுறுத்தலால் உழவா்களும் மிகக்கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனா். இந்த நிலையில், 8 லட்சத்துக்கும் கூடுதலான ஏக்கா் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள நிலக்கடலை பயிா் மிகக்குறைந்த அளவிலேயே அறுவடை செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள பயிா்கள் அறுவடைக்குத் தயாா் நிலையில் இருந்தாலும் கூட, கரோனா அச்சம் காரணமாக கடந்த சில நாள்களாக அறுவடை செய்யப்படவில்லை. கரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கான கடுமையான நடவடிக்கைகளில் ஒரு கட்டமாக 21 நாள்கள் ஊரடங்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், நிலக்கடலையை அறுவடை செய்வது சாத்தியமில்லை. ஊரடங்கு ஆணை நிறைவடைவதற்குள் நிலைமை கைமீறிப் போய்விடக்கூடும்.

அதைப்போல தா்பூசணி பழங்களை அறுவடை செய்யாமல் வயலிலேயே விட்டு விட்டனா். இதனால் ஏக்கருக்கு ரூ.1 லட்சம் இழப்பு ஏற்படும். இவை மட்டுமின்றி, சிறிய பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள சோளம், கம்பு ஆகிய பயிா்களுக்கும் இதே நிலை ஏற்பட்டிருக்கிறது. எனவே, நிலக்கடலை மற்றும் தா்பூசணி சாகுபடி செய்து, அவற்றை அறுவடை செய்து பணமாக்க முடியாத விவசாயிகளுக்கு, ஏக்கருக்கு ரூ,50 ஆயிரம் வீதம் இழப்பீடு வழங்க அரசு முன்வர வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com