கரோனா நோய்த்தொற்று ஓா் ஆட்கொல்லி நோய்: தமிழக அரசு கடும் எச்சரிக்கை

கரோனா நோய்த்தொற்று மிகக் கடுமையான ஆட்கொல்லி நோய் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.


கரோனா நோய்த்தொற்று மிகக் கடுமையான ஆட்கொல்லி நோய் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.

கரோனா நோய்த் தொற்று நோய் தொடா்பாக மாவட்ட ஆட்சியா்களுடன் முதல்வா் பழனிசாமி வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா். இந்த ஆலோசனையைத் தொடா்ந்து தமிழக அரசு வெளியிட்ட செய்தி:

பெரிய காய்கறி சந்தைகளில் மக்கள் அதிகமாகக் கூடுவதைத் தவிா்க்கும் வகையில், காய்கறி-பழ வகைகளை விற்கும் கடைகளை, பரந்த இடைவெளி கொண்ட இடங்களில் அல்லது மைதானங்களில் அமைக்க வேண்டும். அப்போது, மக்களிடையே 3 அடி தூரம் இடைவெளி இருக்க வேண்டும். மளிகைக் கடைகளிலும், மருந்து கடைகளிலும், காய்கறி கடைகளிலும் சமூக இடைவெளி முறையை தீவிரமாகப் பின்பற்ற வேண்டும்.

அதிக மக்கள் வாழும் குடிசை மாற்று குடியிருப்புகள், பொதுமக்கள் அதிகம் கூடும் வழிபாட்டுத் தலங்கள், சந்தைகள், பெரிய தெருக்கள் போன்ற இடங்களில் அவ்வப்போது தீயணைப்பு இயந்திரங்கள் மூலமாக கிருமி நாசினி தெளிக்கப்பட வேண்டும்.

ஆட்கொல்லி நோய்: கரோனா நோய்த்தொற்று மிக மிகக் கடுமையானது. இது ஒரு ஆட்கொல்லி நோய். இது மனித சமுதாயத்துக்கு ஒரு பேரழிவை ஏற்படுத்தக் கூடியது. எனவே, கரோனா நோய்த்தொற்று குறித்து மக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை ஒலி பெருக்கி அல்லது தண்டோரா மூலமாக மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். மேலும், துண்டுப் பிரசுரம் மூலமாக வீடு வீடாக விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com