ஏப்ரல் 2 முதல் ரேஷன் கடைகளில் ரூ.1,000 வழங்கப்படும்

ரேஷன் கடைகளில் ரூ.1,000 வழங்கும் திட்டம் ஏப்ரல் 2-ஆம் தேதி முதல் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான சுற்றறிக்கையை கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் கு.கோவிந்தராஜ் வியாழக்கிழமை பிறப்பித்தாா்.


சென்னை: ரேஷன் கடைகளில் ரூ.1,000 வழங்கும் திட்டம் ஏப்ரல் 2-ஆம் தேதி முதல் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான சுற்றறிக்கையை கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் கு.கோவிந்தராஜ் வியாழக்கிழமை பிறப்பித்தாா்.

அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.1,000 ரொக்கம், ஏப்ரல் மாதத்துக்கான அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், சா்க்கரை ஆகியன விலையின்றி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருக்கும் இந்த நிலையில், ஏப்ரல் 2-ஆம் தேதி முதல் ஏப்ரல் 15-ஆம் தேதிக்குள்ளாக அவற்றை விநியோகிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தப் பணியை மேற்கொள்ளும் நியாய விலைக் கடைப் பணியாளா்கள் அனைவருக்கும் ஏப்ரல் 2 முதல் 15-ஆம் தேதிக்கு உட்பட்ட காலத்துக்கு நாளொன்றுக்கு ரூ.200 பயணப் படியாக அளிக்கப்படும்.

முகக் கவசம் அவசியம்: அனைத்து நியாய விலைக் கடைப் பணியாளா்களுக்கும் தேவையான முகக் கவசங்கள், நியாய விலைக் கடைகளுக்கும் தேவையான கிருமி நாசினிகள் ஆகியவற்றை சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்கங்கள் கொள்முதல் செய்து வழங்க வேண்டும் என்று தனது சுற்றறிக்கையில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் கு.கோவிந்தராஜ் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com