தஞ்சாவூர் சந்தை 3 நாட்களுக்கு மூடல்

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் தஞ்சாவூரில் தற்காலிக சந்தை வெள்ளிக்கிழமை முதல் 3 நாட்களுக்கு மூடப்படுகிறது.
தஞ்சாவூர் சந்தை 3 நாட்களுக்கு மூடல்

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் தஞ்சாவூரில் தற்காலிக சந்தை வெள்ளிக்கிழமை முதல் 3 நாட்களுக்கு மூடப்படுகிறது.

கரோனா பரவல் தடுப்புக்காக தஞ்சாவூர் புதுக்கோட்டை சாலையில் உள்ள தற்காலிக காமராஜர் சந்தை மார்ச் 24ம் தேதி முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே திறந்து வைக்கப்பட்டு வந்தது. இதனால், இச்சந்தையில் கூட்டம் அதிகமாக இருந்தது.

இந்நிலையில், இச்சந்தையில் தஞ்சாவூர் கோட்டாட்சியர் எம். வேலுமணி உள்ளிட்ட அலுவலர்கள் மார்ச் 25ம் தேதி ஆய்வு செய்தனர். அப்போது, சந்தைக்கு வந்த பொதுமக்களிடம் கரோனா தடுப்பு தொடர்பான முகக்கவசம் உள்பட உரியப் பாதுகாப்பு அம்சங்கள் குறைவாக இருப்பதும், இதன் மூலம் கரோனா வைரஸ் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதும் தெரிய வந்தது. இதையடுத்து, வியாபாரிகளிடம் அலுவலர்கள் ஆலோசனைகள் வழங்கினர்.

பின்னர், காய்கறி வியாபாரிகள் சங்கத்தினர் ஒன்று கூடி ஆலோசனை நடத்தினர். இதில், மார்ச் 27, 28, 29ஆம் தேதிகளில் சந்தையை மூடுவது என முடிவு செய்யப்பட்டது. இதன்படி, இச்சந்தை வெள்ளிக்கிழமை மூடப்பட்டது. மீண்டும் இச்சந்தையைத் திறக்கும்போது கரோனா தடுப்பு நடவடிக்கையை முழுமையாகச் செயல்படுத்தும் விதமாகவும் திட்டமிடப்பட்டு வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com