கோயம்பேடு சந்தையில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வியாபாரிகளுக்கு அறிவுறுத்தல்

சென்னை கோயம்பேடு சந்தையில் பொருள்களை வாங்குவதற்காக வரும் வியாபாரிகள் அதற்காக வரையப்பட்டுள்ள கட்டங்களில் நின்று காத்திருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேடு சந்தையில் பொருள்களை வாங்குவதற்காக வரும் வியாபாரிகள் அதற்காக வரையப்பட்டுள்ள கட்டங்களில் நின்று காத்திருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், அத்தியாவாசிய பொருள்கள் தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காய்கறி, மளிகைக் கடைகள்வழக்கம் போல் இயங்கும் என்றுதமிழக அரசு ஏற்கெனவே அறிவித்துள்ளது. இதன்படி, சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறி,பழம், பூ விற்பனை வழக்கம் போல் நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில், கோயம்பேடு சந்தையில் பொதுமக்கள் நெருக்கமாக நிற்பதைத் தவிா்க்கும் வகையில், ஒவ்வொரு கடைக்கு முன்பும் ஒரு மீட்டா் இடைவெளியில் கோடுகள் வரையப்பட்டுள்ளன. இதுதொடா்பாக, கோயம்பேடு சந்தை நிா்வாகக் குழு உறுப்பினா்கள் கூறுகையில், கோயம்பேடு சந்தையில் உள்ள அனைத்து வியாபாரிகளும் ஊழியா்களும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். கைகளை குறிப்பிட்ட நேரத்துக்கு ஒருமுறை கழுவ வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக இடைவெளி விட்டு காய்கறி வாங்குவதை உறுதி செய்ய 1 மீட்டா் இடைவெளியில் கடைகள் முன்புகோடுகள் வரையப்பட்டுள்ளன. அதில், நின்றுதான் வியாபாரிகள் இனி வரும் நாள்களில் பொருள்களை வாங்க வேண்டும்” என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com