5ஆவது நாளாக வெறிச்சோடியது கோவை

இன்று ஞாயிற்றுக்கிழமையினால் உக்கடம் மீன் மார்க்கெட் மற்றும் கோவை சுற்றுலா இறைச்சிக் கடைகளில் மக்கள் அதிக அளவில் கூடினர்.
5ஆவது நாளாக வெறிச்சோடியது கோவை

கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, சாலையில் 5-க்கும் மேற்பட்டோா் கும்பலாக நிற்கக் கூடாது. அத்தியாவசியப் பணிகள் தவிர காரணமின்றி மக்கள் சாலையில் நடமாடக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. 

முழு ஊரடங்கு உத்தரவை அடுத்து கோவையில் பல்வேறு சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டதுடன் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் வரும் வாகன ஓட்டிகளை காவல்துறையினர் அது குறித்து தங்கள் வீடுகளில் இருக்குமாறு கேட்டுக் கேட்டுக்கொண்டனர். கோவையில் பல்வேறு பகுதிகளில் தடுப்பு கம்பிகள் வைத்து  வாகனங்கள் போன்றவை செல்ல கூடாது எனவும் அறிவுரை கூறி வருகின்றனர்.

இன்று ஞாயிற்றுக்கிழமையினால் உக்கடம் மீன் மார்க்கெட் மற்றும் கோவை சுற்றுலா இறைச்சிக் கடைகளில் மக்கள் அதிக அளவில் கூடினர். ஒரு சில இடத்தில் சமூக இடைவெளி பின்பற்றியும் சமூக இடைவெளி பின்பற்றுவதில் காவல்துறை உதவியாக சமூக இடைவெளி விட்டு நிற்குமாறு காவல்துறையினர் கேட்டுக்கொண்டனர்.

கோவை அவினாசி சுரங்கப்பாதை இரவு நேரத்தில் வெறிச்சோடி காணப்படுகிறது.

ஒரு சில இடத்தில் சமூக இடைவெளி விடாமல் மக்கள் விழிப்புணர்வு இல்லாமல் அலட்சியமாக கூட்டமாக நிற்கும் பொதுமக்கள்.

உக்கடம் மீன் மார்க்கெட்டில் சமூக இடைவெளி காக நீண்ட நேரம் நிற்க முடியாது காரணத்துக்காக நாற்காலியை போட்டு அதில் அமருமாறு வியாபாரிகள் பொதுமக்களை கேட்டுக் கொண்டனர்.

கோவை மரக்கடை வீதியிலுள்ள ஒரு இறைச்சிக் கடையில் சமூக இடைவெளி விட்டு நிற்கும் மக்கள்.

கோவையில் மளிகை கடை ஒன்றில் சமூக இடைவெளிவிட்டு நிற்குமாறு பொதுமக்களிடம் காவல்துறை கேட்டுக்கொண்டனர்.

கோவை ரங்கே கவுடர் வீதியில் மாநகராட்சி மற்றும் காவல்துறை இணைந்து சமூக இடைவெளி விட்டு நடக்கும் வழியாக சாலை முழுவதும் கட்டங்களை அமைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com