ஈரோடு பேருந்து நிலையத்தில் நாய்களுக்கு உணவு கொடுத்த மாநகராட்சி ஊழியர்

நாடு முழுவதும் கரோனா பாதிப்பு பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. ஊரடங்கு உத்தரவால் பொதுமக்கள் நடமாட்டம் முற்றிலும் முடங்கி இருக்கிறது. 
ஈரோடு பேருந்து நிலையத்தில் நாய்களுக்கு உணவு கொடுத்த மாநகராட்சி ஊழியர்

நாடு முழுவதும் கரோனா பாதிப்பு பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. ஊரடங்கு உத்தரவால் பொதுமக்கள் நடமாட்டம் முற்றிலும் முடங்கி இருக்கிறது. 

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு பேருந்து நிலையம், ஈரோடு ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகள் முற்றிலும் மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளாக தடை செய்யப்பட்டு இருக்கின்றன. இந்தநிலையில் ஈரோடு பேருந்து நிலையத்தில் சுற்றித்திரிந்த நாய்களுக்கு மாநகராட்சி பெண் ஊழியர் ஒருவர் பிஸ்கெட்டுகளை உணவாக கொடுத்தார். வழக்கமாக பேருந்து நிலைய கடைகள், பேருந்து நிலையத்துக்கு வரும் பொதுமக்கள் இந்த நாய்களுக்கு உணவுகள் வழங்குவார்கள். 

ஆனால் கடந்த 2 நாட்களாக பேருந்து நிலையம் முற்றிலும் மூடப்பட்டதால் நாய்களுக்கு உணவு வழங்க யாரும் இல்லை. நேற்றுக்காலை ஈரோடு பேருந்து நிலையத்துக்கு தூய்மை பணிக்காக வந்த தூய்மை பணியாளர் முத்துப்பிரியா என்பவர் நாய்களுக்கு பிஸ்கெட் வாங்கி கொடுத்தார். இதுபற்றி தூய்மை பணியாளர் முத்துப்பிரியா கூறும்போது, ஈரோடு பேருந்து நிலையத்தில் ஆதரவற்ற நாய்கள் பல உள்ளன. 

இங்குள்ள ஆட்டோ டிரைவர்கள், கடை உரிமையாளர்கள் பிரியாணி உள்ளிட்ட உணவுகளை வாங்கி வைப்பார்கள். ஆனால் இப்போது உணவு வழங்க யாரும் இல்லை. நான் பேருந்து நிலையத்துக்குள் வந்ததும், நாய்கள் பசியுடன் இருப்பதை பார்த்து பரிதாபமாக இருந்தது. எனவே பிஸ்கெட் வாங்கி கொடுத்தேன். அவையும் நன்றியுடன் என்னை சுற்றி சுற்றி வருகின்றன. 

பேருந்து நிலையம் முழுவதும் நான் தூய்மை பணி செய்யும்போது நாய்களும் என்னுடன் வருவதால் யாரும் இல்லையே என்ற அச்சம் இல்லாமல் பணியை மேற்கொள்கிறேன்.-இவ்வாறு அவர் கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com