துறையூரில் விளையாட்டு மைதானத்தில் செயல்படும் காய்கறி அங்காடிக்கும் வாடகை வசூல்  - அனைத்து தரப்பினரும் அதிருப்தி

துறையூரில் விளையாட்டு மைதானத்தில் தற்காலிகமாக செயல்படும் காய்கறி அங்காடியில் கடை வைத்திருப்பவர்களிடம் ஞாயிற்றுக்கிழமை வாடகை வசூலிக்கப்பட்டதால் வியாபாரிகள், நுகர்வோர் என
துறையூரில் விளையாட்டு மைதானத்தில் செயல்படும் காய்கறி அங்காடிக்கும் வாடகை வசூல்  - அனைத்து தரப்பினரும் அதிருப்தி

துறையூரில் விளையாட்டு மைதானத்தில் தற்காலிகமாக செயல்படும் காய்கறி அங்காடியில் கடை வைத்திருப்பவர்களிடம் ஞாயிற்றுக்கிழமை வாடகை
வசூலிக்கப்பட்டதால் வியாபாரிகள், நுகர்வோர் என அனைத்து தரப்பினரும்
அதிருப்தி அடைந்தனர்.

தமிழக அரசின் 144 தடையுத்தரவும், சமூக விலகலும் கடுமையாக காவல், வருவாய், நகராட்சி, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளின் அரசு அதிகாரிகள் தரப்பில் நடைமுறைப்படுத்தப்படுகிறது.  இந்த நிலையில் துறையூரில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்த சாமிநாதன் காய்கறி அங்காடியும், உழவர் சந்தையும் போதிய இடவசதியின்றி மக்கள் நெருக்கடியாகவே காணப்பட்டதால் சமூக விலகல் என்பது சாத்தியமில்லாமல் இருந்தது. இதனால் திருச்சி மாவட்ட ஆட்சியர் உத்தரவுப்படி, முசிறி கோட்டாட்சியர், துறையூர் வட்டாட்சியர், நகராட்சி பொறுப்பு ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் துறையூர் காய்கறி அங்காடியை தற்காலிகமாக துறையூர் ஜமீன்தார் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்துக்கு மாற்றுவதற்கு வெள்ளிக்கிழமை நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதற்கு சாமிநாதன் காய்கறி அங்காடி வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் அதிகாரிகள் அங்காடியை பூட்டியதால் வேறு வழியின்றி சனிக்கிழமை முதல் வியாபாரிகள் ஜமீன்தார் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் தரைக்கடைகள் அமைத்தனர். பொதுமக்களும் அங்கு சென்று தங்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்கிச் சென்றனர். இந்த நிலையில் சாமிநாதன் காய்கறி அங்காடியில் தரைக்கடை வியாபாரிகளிடம் வாடகை வசூலிக்க ஒப்பந்த உரிமை பெற்றுள்ள துறையூர் எம்எல்ஏவின் உறவினர் கந்தசாமி ஞாயிற்றுக்கிழமை துறையூர் ஜமீன்தார் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் தரைக்கடை வைத்திருந்தவர்களிடம் வாடகை கட்டணம் வசூலித்தார். 

ஒப்பந்ததராரரின் இந்த செயல் வியாபாரிகளிடமும், பொதுமக்களிடமும் அதிருப்தியை அளித்தது. இதனைக் கவனித்த அனைவரும், நியாயமாக பார்த்தால் தனியார் பள்ளி தாளாளர் தான் வாடகை வசூலிக்க வேண்டும். பள்ளி நிர்வாகம் அமைதியாக இருக்கிற போது நகராட்சி அனுமதித்த இடத்துக்கு வாடகை வசூலிப்பது போன்று ஒப்பந்ததாரர் தனியார் பள்ளியில் வாடகை வசூலிப்பது நியாயமில்லை என்று முணுமுணுத்தனர். இந்த நிலையில் தகவலறிந்து சென்ற செய்தியாளர்கள் நேரில் சென்று ஒப்பந்ததாரரிடம் விசாரித்தனர். மேலும் திமுக எம்எல்ஏ ஸ்டாலின்குமாரிடமும் முறையிட்டனர். இதனையடுத்து ஒப்பந்ததாரர்கள் வாடகை வசூலிப்பதை நிறுத்தி விட்டு கலைந்து சென்றனர். ஒரு முறை பயன்படுத்தப்படுகிற முக கவசம் துறையூரில் உள்ள மருந்தகங்களில் ரூ. 20க்கு விற்கப்படுகிறது.

இது மத்திய அரசு ரூ. 10க்கு விற்கவேண்டும் என்ற அறிக்கைக்கு எதிரானது. எரிகிற வீட்டில் கிடைத்த வரை லாபம் என்ற பழமொழி போல் முக கவசம், சானிடைசர் அதிக விலைக்கு விற்பதும், தனியார் பள்ளி மைதானத்துக்கு வாடகை வசூலிப்பதும் உள்ளது என பொதுமக்கள் கருதுகின்றனர். நாட்டில் நிலவும் அசாதரணமான சூழலில் அரசு உத்தரவுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் பல்வேறு சிரமங்களுக்கு இடையிலும் பொதுமக்களுக்கு காய்கறி தடையற கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் அதனை சிரமத்துடன் வெவ்வேறு  ஊர்களில் சேகரித்து தனியார் பள்ளி மைதானத்தில் கொண்டு வந்து சேர்த்து விற்பனைக்கு வைத்திருக்கும் இந்த நேரத்தில் நகராட்சியின் ஒப்பந்ததாரர் தனியார் பள்ளியின் மைதானத்துக்கு வாடகை கேட்டது பொதுமக்கள் மத்தியில் அந்த ஒப்பந்ததாரர் மட்டுமல்லாது அவர் எம்எல்ஏ உறவினர் என்பதாலும்,  துறையூர் எம்எல்ஏ, நகராட்சி நிர்வாகத்துக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. 

இது போன்று இனி நடக்காத வகையில் யாரும் பாதிக்காதபடிக்கு மக்களுக்கு கிடைக்கிற சேவைகளை அதிகாரிகள் கண்காணிக்கவேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com