முதல்வர் நிவாரண நிதிக்கு ஒரு நாள் ஊதியத்தை வழங்க தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் முடிவு

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் ஒரு நாள் ஊதியத்தை வழங்க முடிவு செய்வதாக அச்சங்கத்தின் சேலம் மாவட்டத்தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார்.
முதல்வர் நிவாரண நிதிக்கு ஒரு நாள் ஊதியத்தை வழங்க தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் முடிவு

கரோனா நோற்று தொற்றுப் பாதிப்பை சமாளிக்க உதவிடும் வகையில், முதல்வரின் பொதுநிவாரணநிதிக்கு நிதியுதவி அளிக்கலாம் என்று வெள்ளிக்கிழமை தமிழக அரசு வேண்டுகோள் விடுவித்தது. இதையடுத்து தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் ஒரு நாள் ஊதியத்தை வழங்க முடிவு செய்வதாக அச்சங்கத்தின் சேலம் மாவட்டத்தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சேலம் மாவட்டத்தலைவர் கே.தங்கவேலவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கரோனா வைரஸ் மக்களை பெரிய துன்பத்திற்கு ஆளாகியுள்ளது. அதனால் மக்கள் தனிமைப்படுத்தி வாழவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கரோனா நோய் ஒழிப்பு நடவடிக்கையில் தமிழக முதல்வர் எடுத்துள்ள அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் ஒரு லட்சம் பேர் பாராட்டுகிறோம். 

அதே நேரத்தில் கரேனா நோற்று தொற்று ஒழிப்பு  நடவடிக்கைகளுக்காக எங்கள் சங்கத்தின் மாநில குழு முடிவின் படி சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர்கள், சமையல் உதவியாளர்கள் ஒரு லட்சம் பேர் ஒரு நாள் ஊதியத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்க முடிவு செய்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com