ஈரோடு மாவட்டத்தில் தடையை மீறியதாக 380 பேர் மீது வழக்குப்பதிவு:  காவல்துறையினர் நடவடிக்கை

ஈரோடு மாவட்டத்தில் தடையை மீறியதாக 380 பேர் மீது வழக்குப்பதிவு:  காவல்துறையினர் நடவடிக்கை

கொரோனா  வைரஸ் உலகை அச்சுறுத்திக் கொண்டே வருகிறது. இந்தியாவிலும் மெல்ல மெல்ல ஊடுருவி தற்போது தமிழகத்திலும் இதன் தாக்கம் எதிரொலித்துள்ளது.

கரோனா  வைரஸ் உலகை அச்சுறுத்திக் கொண்டே வருகிறது. இந்தியாவிலும் மெல்ல மெல்ல ஊடுருவி தற்போது தமிழகத்திலும் இதன் தாக்கம் எதிரொலித்துள்ளது. இதனை அடுத்து கரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் ஒன்றிணைந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி கடந்த 25ஆம் தேதி முதல் தொடர்ந்து 21 நாட்களுக்கு இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு இன்று 6வது நாளாக அமலில் உள்ளது.  

இந்த தடை உத்தரவு காலங்களில் மக்கள் அத்தியாவசிய பொருட்களான பால் காய்கறி மளிகைப் பொருட்களை தவிர வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று அரசு கேட்டுக் கொண்டுள்ளது.  தனிமைப் படுத்திக் கொள்வது தான் கரோனா வில் இருந்து நம்மை பாதுகாக்கும் ஒரே வழி என்றும் தொடர்ந்து அறிவுறுத்தி  வருகிறது. ஆனால் பல்வேறு இடங்களில் மக்கள் தேவை இன்றி வெளியே சுற்று வரை காண முடிகிறது.  

இதன் மூலம் கரோனா தாக்கம் மேலும் அதிகரிக்கக்கூடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனை தவிர்க்கும் வகையில் காவல்துறையினர் ஆங்காங்கே தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். தேவையில்லாமல் வெளியே சுற்றும் இளைஞர்கள் குறித்து வழக்குப்பதிவு செய்து வருகிறார்கள். அது போன்ற அத்தியாவசியமான கடைகளைத் தவிர தேவையில்லாமல் கடைகளை திறந்து வியாபாரம் செய்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

ஈரோடு மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் உஷார்படுத்தப்பட்டு பல்வேறு இடங்களில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அப்போது அத்தியாவசிய பொருட்கள் என்று தேவையில்லாமல் சுற்றி தெரிந்த நபர்களை  பிடித்து வழக்கு பதிவு செய்தனர். இவ்வாறாக கடந்த 5 நாட்களில் மட்டும் தேவையில்லாமல் சுற்றி தெரிந்ததாகவும் அத்தியாவசிய பொருட்கள் தவிர தேவையில்லாத கடைகளை திறந்து வைத்து வியாபாரம் செய்ததாக 380 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  

தொடர்ந்து இவ்வாறு செயல்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com