
பெரியகுளத்தில் மதுரை மத்திய கூட்டுறவு வங்கி முன் முதியோர் உதவித் தொகை பெறுவதற்காக ஏராளமான பெண்கள் குவிந்தனர். சமூக இடைவெளி பற்றிக் கவலைப்படாமல் நீண்ட இவர்கள் கூட்டமாகவே இருந்தனர்.
தெற்கு அக்ரஹாரத்தில் செயல்பட்டு வரும் இந்த வங்கியில் திங்கள்கிழமை முதியோர் உதவித் தொகை வழங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து 100-க்கு மேற்பட்ட முதியோர்கள் வங்கியின் முன் குவிந்தனர். இதனால், பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டது.
இதனைக் கட்டுப்படுத்த வங்கி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மேலும் அதே தெருவிலுள்ள தேனி மக்களவைத் தொகுதி உறுப்பினர் ப.ரவீந்திரநாத் குமாரும் அப்போது அந்த வழியேதான் தேனி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு சென்றார்.
அவரின் பின்னால் சென்ற பெரியகுளம் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆறுமுகமும் சென்றார். அவரும் வாகனத்தை நிறுத்தி மூதாட்டிகளுக்கு அறிவுரை கூறலாம் என்று நினைக்கவில்லை. நிற்காமல் சென்றுவிட்டார்.
சிறிது நேரத்துக்குப் பிறகு காவல்துறையினர் அந்த இடத்திற்கு வந்து மூதாட்டிகளை இடைவெளி விட்டு நிற்க வைத்தனர். பின் உதவித் தொகை வாங்கிச் சென்றனர்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G