சக்தி மசாலா நிறுவனம் ரூ. 5 கோடி நிதி

கரோனா வைரஸ் தடுப்புப் பணிக்காக, தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு சக்தி மசாலா நிறுவனம் ரூ.5 கோடியை நிதியாக வழங்கியுள்ளது.
சக்தி மசாலா நிறுவனம் ரூ. 5 கோடி நிதி


கரோனா வைரஸ் தடுப்புப் பணிக்காக, தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு சக்தி மசாலா நிறுவனம் ரூ.5 கோடியை நிதியாக வழங்கியுள்ளது.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கரோனா வைரஸ் தொற்றினைத் தடுக்க அரசு மேற்கொள்ளும் பணிகளுக்கு உதவும் வகையில், முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்க வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்தார். இதையடுத்து பல்வேறு தொழில் நிறுவனங்கள், தனிநபர்கள் உள்ளிட்டோர் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக முதல்வரின் வேண்டுகோளை ஏற்று, ஈரோடு சக்தி மசாலா நிறுவனம் ரூ.5 கோடியை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நிதியாக வழங்கியுள்ளது. 

இதன்படி, ரூ 5 கோடிக்கான காசோலையுடன், சக்தி மசாலா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் பி.சி.துரைசாமி, இயக்குநர் டி.சாந்தி ஆகியோர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், 

‘தமிழகத்தில் கரானா வைரஸ் பரவாமல் தடுக்க தாங்கள் எடுத்து வரும் சீரிய முயற்சிகளுக்கு சக்தி மசாலா நிறுவனங்களின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இந்த முயற்சிகளுக்கு உதவும் பொருட்டு, எங்கள் சக்தி மசாலா நிறுவனத்தின் சார்பில், முதல்வர் பொது நிவாரண நிதிக்கு ரூ.5 கோடி வழங்குகிறோம். இதற்கான காசோலையை இத்துடன் இணைத்துள்ளோம். கரோனா வைரஸ் பரவல் தடுப்புப் பணிகளில் நாங்களும் பங்கேற்க வாய்ப்பு அளித்தமைக்கு நன்றி’ எனத் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com