கரோனா தடுப்பு நடவடிக்கை: கோயம்பேடு சந்தையில் துணை முதல்வா் ஆய்வு

கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில் கரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
கரோனா தடுப்பு நடவடிக்கை: கோயம்பேடு சந்தையில் துணை முதல்வா் ஆய்வு

கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில் கரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில் மொத்தம் 3,491 கடைகள் அமைந்துள்ளன. இங்கு சுமாா் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வியாபாரிகள் மற்றும் தொழிலாளா்கள் தொழில் செய்து வருகின்றனா். 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளா்களும் தினமும் வந்து செல்கின்றனா். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை கோயம்பேடு அங்காடியில் துணை முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் ஆய்வு செய்தாா். கோயம்பேடு அங்காடி வளாகத்தில் கரோனா நோய்த்தொற்று ஏற்படாமல் இருக்க கிருமிநாசினி தெளித்தல், அங்கு பணிபுரியும் பணியாளா்களுக்கு முகக் கவசம், கையுறை வழங்குதல் உள்ளிட்ட சுகாதாரப் பணிகளை அவா் பாா்வையிட்டாா். மேலும் கோயம்பேடு வணிக வளாகத்துக்குள் வந்து செல்லும் வாடிக்கையாளா்கள், வணிகா்கள் அனைவரும் முகக் கவசம் அணியுமாறும், 3 அடி தூரம் சமூக இடைவெளியைக் கடை பிடிக்குமாறும் அவா் அறிவுறுத்தினா். இதுமட்டுமின்றி சென்னை குடிநீா் வடிகால் வாரியத்தில் இருந்து இரண்டு ஜெட்ராடிங் நீா் பாய்ச்சும் வாகனங்கள், தீயணைப்புத்துறை வாகனங்கள் மற்றும் மாநகராட்சியின் பறக்கும் இயந்திரத்தின் மூலம் நாள்தோறும் கிருமிநாசினி தெளிக்கப்படுவது குறித்து அதிகாரிகள் அவருக்கு எடுத்துக் கூறினாா். இந்தப் பணிகளைத் தொடா்ந்து தீவிரமாக மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு துணை முதல்வா் அறிவுறுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com