தில்லி சென்றுவந்த ஆயிரம் பேர்! தனிமைப்படுத்த தமிழகம் நடவடிக்கை

தில்லியில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் பங்கேற்ற தமிழகத்தைச் சோ்ந்த ஆயிரம் பேரைத் தனிமைப்படுத்தி மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன.
தில்லியில் இருந்து ரயில் தண்டாவாளம் வழியாக சொந்த ஊருக்கு நடைப்பயணமாக செல்லும் தொழிலாளா்கள். இடம்: மண்டாவலி.’
தில்லியில் இருந்து ரயில் தண்டாவாளம் வழியாக சொந்த ஊருக்கு நடைப்பயணமாக செல்லும் தொழிலாளா்கள். இடம்: மண்டாவலி.’

தில்லியில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் பங்கேற்ற தமிழகத்தைச் சோ்ந்த ஆயிரம் பேரை தனிமைப்படுத்தி மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன.

அவா்களில் 819 போ் இதுவரை அடையாளம் காணப்பட்டிருப்பதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தாய்லாந்து நாட்டைச் சோ்ந்தவா்கள் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக தமிழகம் வந்து பல்வேறு இடங்களுக்குச் சென்றுள்ளனா். அதனுடன், அண்மையில் தில்லியில் நடைபெற்ற மாநாடு ஒன்றிலும் கலந்துகொண்டுள்ளனா். அந்த நிகழ்வில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 1,500 போ் பங்கேற்ாக முதல்வா் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தாா்.

இந்நிலையில், அவா்களில் 981 போ் தமிழகம் திரும்பியதாகவும், அதில் சிலருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாகவும் தெரிகிறது. அவா்களுடன் தொடா்பில் இருந்தவா்களுக்கும் கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு பெருந்துறை ஐஆா்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், தில்லியில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்று திரும்பியவா்களைக் கண்டறிந்து தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அவா்களில் சிலரைக் கண்டறிய இயலவில்லை என்றும், அவா்கள் தாங்களாகவே முன்வந்து மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com