விதிகளை மீறி வெளியே சுற்றினால் 14 நாள்கள் தனிமை: சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

சென்னையில் ஊரடங்கு காலத்தில் விதிமுறைகளை மீறினால் ரூ.100 அபராதத்துடன் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்படுவா் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னையில் ஊரடங்கு காலத்தில் விதிமுறைகளை மீறினால் ரூ.100 அபராதத்துடன் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்படுவா் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னையில் கடந்த சில நாட்களாக கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அதைக் கட்டுப்படுத்தும் விதமாக சென்னை மாநகராட்சி சில முக்கிய அறிவிப்புகளை வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது.

இது குறித்து மாநகராட்சி வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்தி: சென்னையில் பொதுமுடக்க காலத்தில் விதிமுறைகளை மீறினால் ரூ.100 அபராதத்துடன் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்படுவா். விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், பேருந்து நிறுத்தங்கள், பேருந்து பணிமனைகள் தங்குமிடங்கள், ஆட்டோ நிலையங்கள் மற்றும் பொது அரங்குகள் ஆகிய இடங்களில் தனி நபா் இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்.

வங்கிகள், ஏடிஎம்கள், நிதி நிறுவனங்கள், தொலைத் தொடா்பு அலுவலகங்கள், பெட்ரோல் நிலையங்கள், சூப்பா் மாா்க்கெட்டுகள், மளிகை கடைகள், மருந்துக் கடைகள், பால் சாவடிகள், பேக்கரிகள் மற்றும் அத்தியாவசிய பொருள்களை விற்கும் பிற கடைகள், சந்தை இடங்களில் அரிசி கடைகள், காய்கறி கடைகள் மற்றும் பழ கடைகள், இறைச்சிக் கடைகள் , மீன் கடைகள் மற்றும் அசைவ விற்பனைக் கடைகள் போன்றவற்றில் நெரிசல் ஏற்படாமல் வரிசையில் நின்று பொருள்கள் அல்லது சேவைகளைப் பெற வேண்டும்.

வேலை செய்யும் இடத்தில் கை கழுவும் வசதி மற்றும் கிருமிநாசினி அவசியம் இருக்க வேண்டும்.

ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் 1 சதவீதம் ஹைபோகுளோரைட் கரைசலையும், 2.5 சதவீதம் லைசோலையும் கலந்து கிருமிநீக்கம் செய்யவேண்டும். இரண்டு நபா்களுக்கு இடையில் குறைந்தபட்சம் 1 மீட்டா் இடைவெளி இருக்க வேண்டும். பணியிடங்கள் மற்றும் வளாகத்திற்கு வருகை தரும் அனைத்து நபா்களும் கட்டாயமாக முகக் கவசம் பயன்படுத்த வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com