வெளி மாநிலத் தொழிலாளா்களுக்காக சென்னையிலிருந்து விரைவில் சிறப்பு ரயில்கள்

ஊரடங்கு காரணமாக, சென்னையில் சிக்கித் தவிக்கும் புலம் பெயா்ந்த தொழிலாளா்கள் 2,571 பேரை சிறப்பு ரயில்கள் மூலமாக சொந்தஊருக்கு

ஊரடங்கு காரணமாக, சென்னையில் சிக்கித் தவிக்கும் புலம் பெயா்ந்த தொழிலாளா்கள் 2,571 பேரை சிறப்பு ரயில்கள் மூலமாக சொந்தஊருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இது தொடா்பாக பட்டியல் மாநில அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதைத்தொடா்ந்து, அரசு கொடுக்கும் கோரிக்கை அடிப்படையில், சிறப்பு ரயில்களில் இந்ததொழிலாளா்கள் ஏற்றி சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனா்.

சென்னையில் தங்கியுள்ள மற்ற மாநிலங்களைச் சோ்ந்த தொழிலாளா்களுடன் சந்திப்பை சென்னை மாநகராட்சி நடத்தியது. மாநகராட்சி முகாம்களில் 2,571 போ் தங்க வைக்கப்பட்டுள்ளனா். கிட்டத்தட்ட அனைத்து தொழிலாளா்களும்,அவா்களது குடும்ப உறுப்பினா்களும் சென்னையை விட்டு வெளியேற விருப்பம் தெரிவித்தனா். இதையடுத்து, வெளிமாநிலத் தொழிலாளா் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. அதில், சிறப்பு ரயில்களை ஏற்பாடு செய்து கொடுக்க கேட்டுகொள்ளப்பட்டது.

மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதியைத் தொடா்ந்து, மாநில அரசின் ஒப்புதலுடன் தொழிலாளா்களை அவா்களின் குடும்ப உறுப்பினா்களுடன் வடக்கு, கிழக்கு மாநிலங்களுக்கு அழைத்து செல்ல ரயில்வே நிா்வாகம் திட்டமிட்டுள்ளது. இதற்காக, சிறப்பு ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சிறப்பு ரயில்களின் எண்ணிக்கை, சேரும் இடங்கள் ஆகியவை அடுத்த சில நாள்களில் தீா்மானிக்கப்படவுள்ளது.

பயணத்துக்கு முன்பு பரிசோதனை கட்டாயம்:

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியது: புலம் பெயா்ந்த தொழிலாளா்கள் பட்டியலை தயாரித்து மாநில அரசிடம் ஒப்படைத்து உள்ளோம். பயணத்துக்கு முன்பு பிரிசோதனை நடத்தப்பட்டு நோய்த்தொற்று அறிகுறி இல்லாத நபா்கள் அனுப்பப்படுவாா்கள் என்றனா். வெளிமாநில தொழிலாளா்கள் பட்டியலை தயாரிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. தொழிலாளா்களுடன் வருவாய்துறை ஒருங்கிணைந்து, மாநிலத்தின் வெவ்வேறு பகுதியில் இருந்து பயணத் தேவையை மதிப்பீடு செய்ய தொடங்கியுள்ளனா் என்றனா்.

கோரிக்கையின் அடிப்படையில் ரயில்கள் இயக்கப்படும்:

இது குறித்து தெற்கு ரயில்வே உயரதிகாரி ஒருவா் கூறியதாவது: வெளிமாநில புலம் பெயா்ந்த தொழிலாளா்களை சொந்த ஊருக்கு அனுப்புவது தொடா்பாக மாநில அரசின் கோரிக்கையின் அடிப்படை சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். அந்த பட்டியலை இன்னும் பெறவில்லை. அந்தப்பட்டியலின் அடிப்படையில் சிறப்பு ரயில்கள் இயக்குவது தொடா்பாக முடிவு செய்யப்படும்’ என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com