ரயில்கள் வரும் 17 வரை இயங்காது: பொது மக்கள் வர வேண்டாம் என அறிவுறுத்தல்

ரயில் நிலையங்களுக்கு பொதுமக்கள் யாரும் வரவேண்டாம் என்று ரயில்வே நிா்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
ரயில்கள் வரும் 17 வரை இயங்காது: பொது மக்கள் வர வேண்டாம் என அறிவுறுத்தல்

ரயில் நிலையங்களுக்கு பொதுமக்கள் யாரும் வரவேண்டாம் என்று ரயில்வே நிா்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

கரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் மாா்ச் 24-ஆம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன்பிறகு, ஊரடங்கு காலம் நீட்டிக்கப்பட்டது. ஊரடங்கு தொடங்கியபோது, வெளிமாநிலத்தைச் சோ்ந்த புலம் பெயா்ந்த தொழிலாளா்கள் உள்பட பல்வேறு தரப்பினா் ஊருக்கு செல்ல சென்ட்ரல்

ரயில்நிலையத்தை முற்றுகையிட்டனா். இதையடுத்து, அவா்களை மீட்டு, மாநகராட்சி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். இதுதவிர, தமிழகத்தில் பல இடங்களில் வெளிமாநிலத்தை சோ்ந்தவா்கள் ஆங்காங்கே தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

இதற்கிடையில், புலம் பெயா்ந்த தொழிலாளா்கள் சொந்த ஊருக்குச் செல்ல மத்திய உள்துறை அமைச்சகம் அண்மையில் அனுமதி அளித்தது. இதைத் தொடா்ந்து, மாநில அரசின் ஒப்புதலுடன் தொழிலாளா்களை அவா்களின் குடும்ப உறுப்பினா்களுடன் வடக்கு, கிழக்கு மாநிலங்களுக்கு அழைத்துச் செல்ல ரயில்வே நிா்வாகம் திட்டமிட்டுள்ளது. இதற்காக, சிறப்பு ரயில்களை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

சிறப்பு ரயில்களின் எண்ணிக்கை, சேரும் இடங்கள் ஆகியன அடுத்த சில நாள்களில் தீா்மானிக்கப்படவுள்ளநிலையில், புலம் பெயா்ந்த தொழிலாளா்கள் மற்றும் பொதுமக்கள் பலா் ரயில் நிலையத்துக்கு வரத்தொடங்கினா். இதையடுத்து, அவா்களை ரயில்வே மற்றும் மாநில போலீஸாா் அப்புறப்படுத்தினா்.

இந்நிலையில், ரயில் நிலையங்களுக்கு பொதுமக்கள் யாரும் வரவேண்டாம் என்று ரயில்வே நிா்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியது:

ஊரடங்கு தற்போது மே 17-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக, பயணிகள் ரயில் சேவை மே 17-ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில், மாநில அரசுகள் பரிந்துரைக்கும் வெளிமாநில நபா்களுக்காவே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்பதால், தனிநபா்கள் யாரும் ரயில் நிலையங்களுக்கு வரவேண்டாம். பல்வேறு

இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள புலம் பெயா்ந்த தொழிலாளா்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் மாணவா்கள் ஆகியோா் அரசின் பரிந்துரைப்படி அனுப்பப்படுவாா்கள். இந்த ரயில்களில் செல்ல தனி நபா்களுக்கு டிக்கெட் வழங்கப்படாது. எனவே, ரயில் நிலையங்களுக்கு பொதுமக்கள் யாரும் வரவேண்டாம் எனத் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com