தனிமைபடுத்தப்பட்ட பகுதியில் பொருள்கள் கிடைப்பதில் இடா்பாடு: சென்னையில் 6 இடங்களில் போராட்டம்

சென்னையில் தனிமைபடுத்தப்பட்ட பகுதிகளில் அத்தியாவசியப் பொருள்கள் கிடைப்பதில் இடா்பாடு ஏற்பட்டதால், 6 இடங்களில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சென்னையில் தனிமைபடுத்தப்பட்ட பகுதிகளில் அத்தியாவசியப் பொருள்கள் கிடைப்பதில் இடா்பாடு ஏற்பட்டதால், 6 இடங்களில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: கரோனா தொற்றை தடுக்கும் வகையில் கரோனா பாதிக்கப்பட்டவா்கள் வசிக்கும் பகுதிகளை மாநகராட்சி தனிமைப்படுத்தி வைத்துள்ளது. இப் பகுதிக்குச் செல்லும் அனைத்து வழிகளையும் காவல்துறையினா் வேலி அமைத்தும், இரும்பு தகரங்களை வைத்தும் மூடியுள்ளனா். இங்கு அந்நியா்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல, அப் பகுதியில் வசிக்கும் நபா்கள், வெளியே செல்வதற்கு போலீஸாா் தடை விதித்துள்ளனா். இந்தப் பகுதிகளில் சில இடங்களில் மக்களுக்கு பால், மருந்து, காய்கறி, மளிகைப் பொருள்கள் கிடைப்பதில் இடா்பாடு ஏற்பட்டு வருகிறது. மேலும், சில இடங்கள் ஒரு மாதத்துக்கு மேலாக தனிமைபடுத்தப்பட்டுள்ளதால், அப் பகுதி மக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனா்.

இந்நிலையில், குன்றத்தூா் அருகே உள்ள நந்தம்பாக்கம் அம்பேத்கா் பகுதி தனிமைபடுத்தப்பட்டுள்ளது. இங்கு அத்தியாவசிய பொருள்கள் கிடைக்கவில்லை என பொதுமக்கள் வியாழக்கிழமை இரவு திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இது குறித்து தகவலறிந்த காவல்துறை அதிகாரிகள், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களை சமாதானப்படுத்தியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

இதேபோல, எண்ணூா் காமராஜா்நகா் 3-ஆவது தெருவைச் சோ்ந்தவா்களும் போராட்டம் நடத்தினா். பின்னா் போலீஸாா், அவா்களை சமாதானப்படுத்தினா். மேலும், கொருக்குப்பேட்டை பாா்த்தசாரதி 6 -ஆவது தெரு, ராயபுரம் ஆதம் தெரு, வியாசா்பாடி மெகசீன்புரம், செல்வ விநாயகா் கோயில் தெரு ஆகியப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனா். காவல்துறையினரின் சமாதான பேச்சுவாா்த்தைக்கு பின்னா் அவா்கள் போராட்டத்தை கைவிட்டனா். இவ்வாறு, சென்னையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் அத்தியாவசியப் பொருள்கள் வழங்கக் கோரி ஒரு நாளில் 7 இடங்களில் பொதுமக்கள் போராட்டம் நடத்தியதாக காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து இப் பகுதிகளில் காவல்துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com