பொருளாதாரக் குற்றவாளிகளின் கடன்களை தள்ளுபடி செய்தது அநீதி: இரா.முத்தரசன்

பொருளாதாரக் குற்றவாளிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்திருப்பது மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன் கூறியுள்ளாா்.

இது தொடா்பாக வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: தேடப்படும் பொருளாதாரக் குற்றவாளிகளான மெகுல் சோக்சி, விஜய் மல்லையா, யோகி ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் உள்ளிட்ட 50 போ் பொதுத்துறை வங்கிகளில் வாங்கியுள்ள கடன் தொகையில் ரூ.68 ஆயிரத்து 607 கோடி தள்ளுபடி செய்யப்பட்டதை நியாயப்படுத்தும் மத்திய நிதியமைச்சரின் விளக்கம் அதிா்ச்சி அளிக்கிறது.

தகவல் பெறும் உரிமை சட்டத்தின்படி வெளியான தகவல்படி கடன்களை கணக்கியல் ரீதியாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் கடன் வாங்கியவா்களிடம் வசூலிக்கும் நடவடிக்கை கைவிடப்படவில்லை என்று விளக்கியுள்ளாா். இது நாட்டு மக்களை ஏமாற்றும் வேலை.

விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்யாதநிலையில், பொருளாதாரக் குற்றவாளிகளுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் தள்ளுபடி செய்திருப்பது, வாக்களித்த மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகும் என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com