காவல்துறையினரின் பாதுகாப்பு கருதி நெல்லை-குமரி எல்லையில் தற்காலிக கண்காணிப்பு கோபுரம் அமைப்பு 

காவல்துறையினரின் பாதுகாப்பு கருதி திருநெல்வேலி-குமரி மாவட்ட எல்லையான ஆரல்வாய்மொழி சோதனை சாவடியில் தற்காலிக கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. 
காவல்துறையினரின் பாதுகாப்பு கருதி நெல்லை-குமரி எல்லையில் தற்காலிக கண்காணிப்பு கோபுரம் அமைப்பு 

காவல்துறையினரின் பாதுகாப்பு கருதி திருநெல்வேலி-குமரி மாவட்ட எல்லையான ஆரல்வாய்மொழி சோதனை சாவடியில் தற்காலிக கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. 

கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது கரோனா வைரஸ் பாதிப்பு குறைத்துள்ளது. கடந்த 19  நாள்களாக மாவட்டத்தில் யாருக்கும் புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை. ஆனால் வெளியூரில் இருந்து குமரி மாவட்டம் வருபவர்களால் கரோனா வைரஸ் பரவி விடுமோ என்ற அச்சம் நிலவுகிறது. வெளி மாவட்டங்களில் இருந்து சிலர் காய்கறிகள் ஏற்றி வரும் வாகனங்களில் பதுங்கி வருவதாக தெரிய வந்தது. 

இதனைத் தொடர்ந்து ஆரல்வாய்மொழி சோதனை சாவடியில் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர் காய்கறிகள் ஏற்றி வரும் வாகனங்களில் ஏறி அதில் யாரும் பதுங்கி உள்ளனரா என சோதனை செய்து வந்தனர். அவ்வாறு வாகனங்களில் ஏறி சோதனை செய்யும் போது காவல்துறையினருக்கு தொற்று ஏற்படலாம் என்று கருதப்பட்டது. 

இதனை அறிந்த குமரி மாவட்ட க் காவல் கண்காணிப்பாளர் சிறீ.நாத் கடந்த வெள்ளிக்கிழமை ஆரல்வாய்மொழி சோதனை சாவடிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் காவல்துறையினரின் பாதுகாப்பு கருதி ஆரல்வாய்மொழி சோதனை சாவடியில் தற்காலிக கண்காணிப்பு கோபுரம் அமைக்க உத்தரவிட்டார். இதன்படி உடனடியாக கண்காணிப்பு கோபுரம் அமைக்க ப்பட்டு சனிக்கிழமை முதல் பயன்பாட்டுக்கு வந்தது. 

அந்த கோபுரத்தில் ஏறி நின்று காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com