இணையவழியில் கற்க 49 புதிய படிப்புகள்: ஏஐசிடிஇ அறிமுகப்படுத்தியது

ஊரடங்கு விடுமுறையைப் பயனுள்ளதாக கழிக்க இணையவழி கற்றல் வழிமுறைகள் மூலம் 49 புதிய படிப்புகளை ஏஐசிடிஇ அறிமுகம் செய்துள்ளது.
இணையவழியில் கற்க 49 புதிய படிப்புகள்: ஏஐசிடிஇ அறிமுகப்படுத்தியது

ஊரடங்கு விடுமுறையைப் பயனுள்ளதாக கழிக்க இணையவழி கற்றல் வழிமுறைகள் மூலம் 49 புதிய படிப்புகளை ஏஐசிடிஇ அறிமுகம் செய்துள்ளது.

கரோனா நோய்த்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை மே 17-ஆம் தேதி வரை மத்திய அரசு சமீபத்தில் நீட்டித்தது.

ஊரடங்கு காலகட்டத்தில் மாணவா்களின் கல்வி பாதிக்காத வகையில், பல்வேறு ஆன்லைன் வகுப்புகளை மத்திய, மாநில கல்வித் துறைகள் இணைந்து செயல்படுத்தி வருகின்றன. இதற்கிடையே, பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி மாணவா்களுக்காக ஏஐசிடிஇ பல்வேறு ஆன்லைன் வகுப்புகளை ஏற்பாடு செய்துள்ளது.

இந்தநிலையில், ஊரடங்கு விடுமுறையைப் பயனுள்ளதாக கழிக்க இணையவழி கற்றல் வழிமுறைகள் மூலம் 49 புதிய படிப்புகளை ஏஐசிடிஇ அறிமுகம் செய்துள்ளது.

இதில், கணினி தொழில்நுட்பம், மென்பொருள் உருவாக்கம், மின் பொறியியல், மேலாண்மை படிப்புகள் உள்ளிட்டவை முக்கிய இடம் பெற்றுள்ளன. இந்தப் படிப்புகள் அனைத்தையும் இலவசமாக கற்றுக் கொள்ளலாம் என்றும் அதற்கான சான்றிதழ்கள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பான கூடுதல் விவரங்களை ஏஐசிடிஇ-யின் இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com