தனியார் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு சம்பளம் குறைப்பு: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

தனியார் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு சம்பளம் குறைக்கப்பட்டுள்ளது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை பணியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
தனியார் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு சம்பளம் குறைப்பு: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

தனியார் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு சம்பளம் குறைக்கப்பட்டுள்ளது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை பணியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

கரோனா தீநுண்மி பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்தியா முழுவதும் 3 ஆம் கட்டமாக மே 17 ஆம் தேதி வரையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இக்காலக்கட்டத்தில் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் ஊதியத்தை குறைக்கும் நடவடிக்கை, பணியிலிருந்து நீக்கம் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாதெனவும் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில், கடலூர் மஞ்சக்குப்பத்திலுள்ள (புனித.வளனார்) தனியார் கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்கள் திங்கள்கிழமையன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

அதில், அப்பள்ளியின் சுயநிதிப்  பிரிவில் 45 ஆசிரியர்களும், 10 அலுவலக பணியாளர்களும் பணியாற்றி வருகின்றனர். ஊரடங்கின் காரணமாக ஏப்ரல்  மாதத்திற்கான ஊதியமாக 50 சதவீதம் மட்டுமே வழங்க முடியுமென நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால், மாணவ-மாணவிகளிடமிருந்து 2019-20 ஆம் கல்வியாண்டிற்கான கல்விக்கட்டணம் முழுமையாக வசூலிக்கப்பட்டுள்ளது. அதனால், ஊரடங்கு இல்லாத நேரத்திலும் ஆசிரியர்களுக்கு  முழுமையாக சம்பளம்  வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது  கஷ்டமான சூழலில் ஊதியக்குறைவு என்பதை மிகவும் வருத்தமான விஷயமாகும். எனவே, இதன் மீது  மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து  முழு சம்பளம் கிடைக்க ஏற்பாடு  செய்ய வேண்டுமென வலியுறுத்தி உள்ளனர்.

மேலும், இக்கல்வி நிறுவனத்தை நிர்வகித்து வரும் கத்தோலிக்க  கிறிஸ்தவ அமைப்பு  தனது  கட்டுப்பாட்டிலுள்ள கடலூர், புதுச்சேரியிலுள்ள அனைத்து பள்ளிகளிலும் இதே நிலைப்பாட்டைத் தான் எடுத்துள்ளது. எனவே, இதன் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி உள்ளனர். பின்னர், இக்கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்திலும் மனு அளித்தனர். இதுகுறித்து கல்வியாளர்கள் தெரிவிக்கையில், மாவட்டத்திலுள்ள பெரும்பாலான கல்வி நிறுவனங்களில் இதே நிலைப்பாடு தான் கடைப்பிடிக்கப்படுகிறது. 

இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்களையும் உள்ளடக்கிய தனிக்குழுவை அமைத்து ஆராய வேண்டும். நெருக்கடியான சூழல்களில் கல்வி  நிறுவனத்தை நடத்துபவர்கள் மனிதாபிமானத்துடன் நடந்துக்  கொள்ள வேண்டும். இல்லையெனில், மாவட்ட நிர்வாகம் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com