கூத்தாநல்லூரில் ரமலான் மாதத்திலும் குவியும் நலத்திட்ட உதவிகள்

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் ரமலான் மாதமான நடப்பு மாதத்திலும் நிவாரண உதவிகள் தொடர்ந்து குவிந்து வருகிறது.
கூத்தாநல்லூரில் ரமலான் மாதத்திலும் குவியும் நலத்திட்ட உதவிகள்

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் ரமலான் மாதமான நடப்பு மாதத்திலும் நிவாரண உதவிகள் தொடர்ந்து குவிந்து வருகிறது.

கரோனா தொற்று நோய் பலரும் பல விதத்தில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதில், ஏழை, எளிய, கூலித் தொழிலாளர்களின் பாதிப்பு பெரும் பாதிப்பாக உள்ளன. இந்தப் பாதிப்புகளைத் தீர்க்க ஏழை, எளிய கூலித் தொழிலாளர்களுக்கு சமூக ஆர்வலர்கள் பலரும் உதவி செய்து வருகின்றனர். 

இந்நிலையில், கூத்தாநல்லூர் நுகர்வோர் பாதுகாப்புக் குழு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையம் சார்பில், செயலாளர் கருணாநிதி ஏற்பாட்டின் படி, துணைத் தலைவர் கோஸ்.அன்வர்தீன் தலைமையில், பொருளாளர் ப.கண்ணன், நிர்வாகிகள் அண்ணாமலை, ராமதாஸ் உள்ளிட்டோர், மரக்கடை, அய்யன் தோட்டச்சேரி வடக்குத் தெரு, தெற்குத் தெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 50 குடும்பத்தினருக்கு அரிசி, காய்கறி உள்ளிட்டவைகளையும், எதிர்ப்புச் சக்திக்கான மாத்திரைகளையும் வழங்கினர். 

இதேபோல், ஈஎஸ்ஏஆர் கல்வி அறக்கட்டளை சார்பில், நிறுவனர் மற்றும் தலைவர் எட்டுப்பட்டை சாலப்பை அப்துல் கரீம் ஆலோசனைப் படி, அறக்கட்டளையின் முதன்மை நிர்வாகி வி.எஸ்.வெங்கடேசன் தலைமையில், ஊராட்சி மன்றத் தலைவர் சரவணன் முன்னிலையில், பூந்தாழங்குடியில், 197 ஏழை ,எளிய குடும்பங்களுக்கு அரிசி, மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்கினர். 

இதேபோல், திருவாரூர் மாவட்ட வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத் துறை சார்பில், நபார்டு உதவி பொது மேலாளர் பேட்ரிக் பாஸ்டர் அறிவுறுத்தலின் பேரில், நடமாடும் காய், கனிகள் இல்லம் தேடி விற்கப்பட்டது. கூத்தாநல்லூர் எஃப்.பி. ஓ. நிர்வாக இயக்குநர் ப.முருகையன், இயற்கை விவசாயிகளின் கூட்டமைப்பு செயலாளர் தெ.ஜெயகணபதி உள்ளிட்டோர், கமலாபுரம், நீடாமங்கலம், லெட்சுமாங்குடி, கூத்தாநல்லூர், விளக்குடி, எடையூர், மூலங்குடி உள்ளிட்ட அனைத்து இடங்களிலும், இல்லம் தேடிக் குறைந்த விலையில் காய்கனிகள் விற்கப்பட்டு வருகிறது. 

இதேபோல், பொதக்குடி ஊர் உறவின்முறை ஜமாஅத் நிர்வாக சபை அறப்பணிச் சங்கம் சார்பில், கரோனா தொற்று ஊரடங்கை அடுத்து, ஏழை, எளிய கூலித் தொழிலாளர்களுக்கு பல்வேறு உதவிகள் தொடர்ந்து செய்து வருகிறது. இந்நிலையில், உடல்நிலை சரியில்லாத நிலையில் இருப்பவர்களுக்கு, மருந்துகளும் வழங்கப்பட்டு வருகிறது.

பொதக்குடி சிங்கப்பூர் நண்பர்கள் ஏற்பாட்டில், கடந்த மாதம் மருந்துகள் வழங்கப்பட்டன. கடந்த மாத கணக்கெடுப்பில் விடுபட்டுள்ளவர்கள் மற்றும் மேலும் தற்போது மருந்து தேவைப்படுபவர்களுக்கும் மருத்துவ உதவிகள் வழங்கப்படுகிறது. தற்போது மருந்துகள்  தேவைப்படுவோர்கள் 8098608886, 8526911288 என்ற எண்ணிற்குத் தொடர்பு கொள்ளவும் ஜமாஅத் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com