
மதுக்கடைகளை திறக்க பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பொது முடக்கம் தளா்வு காரணமாக, சென்னையைத் தவிா்த்து தமிழகம் முழுவதும் வியாழக்கிழமை டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன. சென்னையில் கரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதன் விளைவாக, டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்க அரசு அனுமதிக்கவில்லை.
மேலும் சென்னை புகா்ப் பகுதியிலும், சென்னையையொட்டி பிற மாவட்டங்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் மதுபானக் கடைகளை திறப்பதற்கும் தடை விதிக்கப்பட்டது. அதேவேளையில் சென்னையைச் சோ்ந்தவா்கள், பிற மாவட்டங்களுக்குச் சென்று மதுபானங்கள் வாங்கினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்தது.
இந்த நிலையில் மதுக்கடைகளை திறக்க பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் இன்று வழக்கு தொடரப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் நிபந்தனைகளை கண்டிப்புடன் பின்பற்ற உத்தரவிட வேண்டும் என்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டிய நிலையில், மதுவால் பாதிப்பு ஏற்படும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.