ஆண்டிபட்டியில் ஏ.ஐ.டி.யு.சி சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சி அலுவலகம் முன்பு திங்கள்கிழமை ஏ.ஐ.டி.யு.சி சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆண்டிபட்டியில் ஏ.ஐ.டி.யு.சி சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சி அலுவலகம் முன்பு திங்கள்கிழமை ஏ.ஐ.டி.யு.சி சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆண்டிபட்டி பேரூராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட நெசவாளர் சங்க துணைத் தலைவர் வே.பரமேஸ்வரன் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் நலவாரியத்தில் பதிவு செய்து புதுப்பித்த புதுப்பிக்காத என தொழிலாளர்களை பிரிக்காமல் அனைவருக்கும் உதவித் தொகை வழங்கிடவும், கரோனா தடுப்பு நடவடிக்கையில் தொடர்ந்து பணியாற்றி வரும் காவலர்கள், மருத்துவர்கள், தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும். 

ஓப்பந்த பணியாளர்களை நிரந்தர பணியாளர்களாக பணியமர்த்திடவும். ஊரடங்கினால் வேலையின்றி தவித்து வரும் தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு நிவாரணத் தொகையாக மாதம் ரூபாய் 7 ஆயிரத்து 500 வழங்கிட அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். 

இந்த ஆர்ப்பாட்டத்தில் நெசவாளர் சங்க மாவட்ட பொதுச் செயலாளர் செங்கொடி செல்வம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆண்டிபட்டி நகர செயலாளர் பிச்சைமணி, கோ.சந்திரன், பழனிச்சாமி, கண்ணன், அசோகன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com