திருப்பூரில் ஏஐடியுசி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியறுத்தி திருப்பூர் மாவட்டத்தில் ஏஐடியுசி தொழிற்சங்கம் சார்பில் 79 இடங்களில் ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
திருப்பூரில் ஏஐடியுசி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியறுத்தி திருப்பூர் மாவட்டத்தில் ஏஐடியுசி தொழிற்சங்கம் சார்பில் 79 இடங்களில் ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டத்தில் ஏஐடியுசி தொழிற்சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மக்களவை உறுப்பினரும், ஏஐடியூசி மாநிலத் தலைவருமான கே.சுப்பராயன் தலைமை வகித்தார். இதில், பங்கேற்றவர்கள் கூறுகையில், புலம் பெயந்த தொழிலாளர்களை அரசு செலவில் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்க வேண்டும். பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.7,500 வீதம் 3 மாதங்களுக்கு வழங்க வேண்டும். 

ஓய்வூதியதாரர்களுகக்கு நிவாரண உதவியும், பொருளுதவியும் வழங்க வேண்டும். கட்டுமானம், ஆட்டோ மற்றும் அணைப்புசாரா நலவாரியங்களில் பதிவு செய்த அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். நிரந்தர மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பொதுமுடக்க காலத்துக்கான முழு ஊதியத்தையும் வழங்க வேண்டும். நலவாரியத்தின் மாவட்டக் கண்காணிப்புக்குழு கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும். பணிநீக்கம், ஊதிய வெட்டு, வேலை நேரத்தும் அதிகரிக்கும் முயற்சிகளை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர். 

இதில், திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி, அவிநாசி, தாராபுரம் உள்ளிட்ட 79 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து ஏஐடியுசி தொழிற்சங்கம் சார்பில் கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் மாவட்ட ஆட்சியர்மூலமாக தமிழக முதல்வருக்கு அனுப்பிவைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com