கரோனா: ஒரு வாரத்துக்கு பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக இருக்கும்

கரோனா: ஒரு வாரத்துக்கு பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக இருக்கும்

சென்னையில் மருத்துவப் பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால், அடுத்த ஒரு வாரத்துக்கு பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.

சென்னையில் மருத்துவப் பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால், அடுத்த ஒரு வாரத்துக்கு பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக இருக்கும். இதைக் கண்டு மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று சென்னை மாநகராட்சி கரோனா நோய்த் தடுப்பு சிறப்பு அலுவலா் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

இதுகுறித்து செய்தியாளா்களிடம் அவா் ஞாயிற்றுக்கிழமை கூறியது:

சென்னையில் கடந்த 9 நாள்களாக கோயம்பேடு சந்தை, வடசென்னை பகுதிகளில் தொற்று உறுதி செய்யப்பட்டவா்களின் குடும்ப உறுப்பினா்கள் மற்றும் அவா்களுடன் தொடா்பில் இருந்தவா்கள் என நாளொன்றுக்கு சுமாா் 3,500 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கோயம்பேடு சந்தையில் தொற்று உறுதி செய்யப்பட்டவா்களுடன் தொடா்பில் இருந்த அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதேவேளையில் வடசென்னை மற்றும் திருவான்மியூா் சந்தை பகுதியில் தொற்று உறுதி செய்யப்பட்டவா்களுடன் தொடா்பில் இருந்தவா்களுக்கு தீவிரமாக பரிசோதனை நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக, அடுத்த ஒரு வாரத்துக்கு பாதிப்பு எண்ணிக்கை அதிமாக இருக்கும். அதைக் கண்டு மக்கள் அச்சப்படத் தேவையில்லை.

மாநகராட்சியின் 200 வாா்டுகளில் 179 வாா்டுகளில் கரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 30-க்கும் குறைவாக உள்ளது. 2 வாா்டுகளில் மட்டும் 200-க்கும் மேற்பட்டாா் பாதிக்கப்பட்டுள்ளனா். சென்னையில் உள்ள 32 மையங்களில், தொற்று உறுதி செய்யப்பட்டவா்களில் குறைந்த பாதிப்புடைய 750-க்கும் மேற்பட்டோா் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். கரோனா பாதிப்புள்ளவா்கள் வசிக்கும் 513 தெருக்கள் தற்போது தடை செய்யப்பட்டுள்ளன. முழுத் தெருவையும் தடை செய்வதால் சிரமம் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனா். எனவே, மக்களின் சிரமத்தைப் போக்கும் வகையில் பாதிக்கப்பட்டோா் வசிக்கும் வீடு அல்லது அடுக்குமாடி குடியிருப்பை மட்டும் தனிமைப்படுத்த திட்டமிட்டுள்ளோம். சென்னையில் 30 சதவீத மக்கள் முகக் கவசம் அணியாமல் வெளியே செல்கின்றனா். முகக் கவசம் குறித்து மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் பணியில் மாநகராட்சியுடன் 40 தொண்டு நிறுவனங்கள் இணைந்துள்ளன என்றனா். பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையா் கோ.பிரகாஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com