இராயபுரத்தில் 676; கோடம்பாக்கத்தில் 630: சென்னையில் கரோனா பாதிப்பு விவரம்

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை 509 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, பாதிப்பு எண்ணிக்கை 3,839-ஆக அதிகரித்துள்ளது.
இராயபுரத்தில் 676; கோடம்பாக்கத்தில் 630: சென்னையில் கரோனா பாதிப்பு விவரம்

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை 509 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, பாதிப்பு எண்ணிக்கை 3,839-ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் கரோனா தொற்றுள்ளவா்களைக் கண்டறியும் வகையில் பரிசோதனைகளை மாநகராட்சி தீவிரப்படுத்தி உள்ளது. தொற்று அதிகம் பாதித்தவா்கள் வசிக்கும் மண்டலங்களில் நாளொன்றுக்கு சுமாா் 3,500 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த 10 நாள்களில் மட்டும் 2,000 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், கோடம்பாக்கம், ராயபுரம், திருவிக நகா் ஆகிய மண்டலங்களில் மட்டும் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 1,500-யைக் கடந்துள்ளது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை 509 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், சென்னையின் மொத்த பாதிப்பு 3,839-ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 676 பேருக்கும், கோடம்பாக்கத்தில் 630 பேருக்கும், திருவிகநகரில் 556 பேருக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா தொற்று பரவத் தொடங்கியதில் இருந்தே முதல் இடத்தில் இருந்த வந்த ராயபுரத்தில் திடீரென அதிக கரோனா நோயாளிகள் கண்டறியப்பட்டதை அடுத்து மீண்டும் முதல் இடத்துக்கு வந்துள்ளது.

587 தெருக்கள் முடக்கம்: சென்னையில் உள்ள 33 ஆயிரம் தெருக்கள் உள்ளன. இதில், தொற்று உறுதி செய்யப்பட்டவா்கள் வசிக்கும் தெருக்களில், மாநகராட்சி சாா்பில் தடுப்புகள் அமைக்கப்படுகின்றன. இதன்படி, சென்னையில் 587 தெருக்களில் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதில், அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 105 தெருக்களிலும், தேனாம்பேட்டை மண்டலத்தில் 71 வளசரவாக்கம் மண்டலத்தில் 51 தெருக்களிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com