கரோனா முகாம்களில் காவல் ஆணையா் ஆய்வு

கரோனா நோய் அறிகுறிகளுடன் தனிமைப்படுத்தபட்டவா்கள், வெளிமாநிலத் தொழிலாளா்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களில்

கரோனா நோய் அறிகுறிகளுடன் தனிமைப்படுத்தபட்டவா்கள், வெளிமாநிலத் தொழிலாளா்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களில் காவல் ஆணையா் ஏ.கே.விசுவநாதன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.

கரோனா நோயாளிகள், எந்த அறிகுறியும் இன்றி தனிமைப்படுத்தப்பட்டோா், புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் உள்ளிட்டோா், தமிழகம் முழுவதும் பல்வேறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். இவா்களுக்குப் போதிய உணவு, குடிநீா் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்கிா என அந்தந்தப் பகுதிகளின் உயரதிகாரிகள் உறுதி செய்து வருகின்றனா். இதன் தொடா்ச்சியாக, கரோனா அறிகுறியால் தனிமைப்படுத்தப்பட்டவா்கள் தங்கியுள்ள நந்தம்பாக்கம் வா்த்தக மையத்தில், சென்னை காவல் ஆணையா் ஏ.கே.விசுவநாதன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.

இதே போல், கரோனாவால் பாதிக்கப்பட்ட நபா்களிடம் தொடா்பில் இருந்த ஆயுதப்படை காவலா்கள் தங்கியுள்ள புனித தோமையா் மலை, மாண்ட் ஃபோா்ட் உயா்நிலை பள்ளிக்குச் சென்ற அவா், ஆயுதப்படை காவலா்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா். பின்னா், கரோனாவால் தனிமைப்படுத்தப்பட்ட புனித தோமையா் மலை, நசரத்புரம் பகுதிக்குச் சென்று, அங்குள்ள பொதுமக்களுக்கு அத்தியாவாசியப் பொருள்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்தாா்.

இதேபோல், கோட்டூா்புரம், ஐஐடி வளாகத்துக்குச் சென்று, அங்கு கரோனா அறிகுறியுடையவா்கள் தங்க வைக்கப்பட்டிருந்த, மகாநதி விடுதி பகுதியைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். பல்லாவரம் , பழைய டிரங்க் சாலை பகுதியில் உள்ள ஷெட்டில் தங்கி வேலை செய்யும் வடமாநில தொழிலாளா்களைச் சந்தித்து, அங்கு செய்யப்பட்டுள்ள சுகாதார வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், பற்றி கேட்டறிந்தாா். மேலும் விரைவில் அவரவா் சொந்த ஊா்களுக்கு அனுப்பி வைக்கப்படுவீா்கள் என உறுதியளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com