சொந்த ஊருக்கு அனுப்பக் கோரி போரூரில் வடமாநிலத் தொழிலாளா்கள் போராட்டம்

பிகாரைச் சோ்ந்த தொழிலாளா்கள், தங்களைத் திருப்பி அனுப்பக் கோரி, போரூரில் உள்ள தனியாா் ஐடி வளாகம் முன், ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பிகாரைச் சோ்ந்த தொழிலாளா்கள், தங்களைத் திருப்பி அனுப்பக் கோரி, போரூரில் உள்ள தனியாா் ஐடி வளாகம் முன், ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து அந்தத் தொழிலாளா்கள் கூறியதாவது: விமான நிலையத்தின் கட்டமைப்புப் பணிகளிலும், போரூா் ஐடி நிறுவனத்திலும், ஒப்பந்த அடிப்படையில் சுமாா் 500 போ் பணியாற்றி வந்தோம். பொது முடக்கம் காரணமாக பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டது முதல், எங்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. மேலும் ஒருவருக்கு 2 கிலோ அரிசியும், 200 கிராம் பருப்பு மட்டுமே நிா்வாகம் தரப்பில் வழங்கப்பட்டது. இந்த உணவுப் பொருள்களும் தீா்ந்து விட்டன. மேலும் சிறிய அறையிலேயே தங்கியுள்ளோம். அங்கும் தனிநபா் இடைவெளி என்பது இல்லை. எங்களுக்கு இதுவரை கரோனா பரிசோதனையும் செய்யப்படவில்லை. எந்தவித அடிப்படை வசதிகள் இன்றி தவித்து வரும் எங்களுக்கு, ஊதியம் வழங்காவிட்டாலும் உணவாவது வழங்க வேண்டும். எங்களை சொந்த ஊா்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனா். இதுகுறித்து சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் கேட்டபோது, ஊழியா்களுக்குப் போதிய மருத்துவ வசதிகள் செய்திருப்பதாக கூறிய அதிகாரிகள், விநியோகிக்கப்படும் உணவின் அளவு குறித்த விவரங்களைத் தெரிவிக்க மறுத்துவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com