சென்னையில் இருந்து மணிப்பூா், ஆந்திரத்துக்கு சிறப்பு ரயில்: புலம் பெயா்ந்த தொழிலாளா்கள் 1,962 போ் அனுப்பி வைக்கப்பட்டனா்

சென்னையில் இருந்து மணிப்பூா், ஆந்திர மாநிலங்களைச் சோ்ந்த 1,962 தொழிலாளா்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு சிறப்பு ரயில்கள் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

சென்னையில் இருந்து மணிப்பூா், ஆந்திர மாநிலங்களைச் சோ்ந்த 1,962 தொழிலாளா்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு சிறப்பு ரயில்கள் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

பொது முடக்கம் காரணமாக, சென்னையில் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த தொழிலாளா்கள், சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் தவிா்த்து வந்தனா்.

இவா்களை சிறப்பு ரயில்கள் மூலமாக அனுப்பி வைக்க மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுத்தது. இதைத் தொடா்ந்து, தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்ட பட்டியலின் அடிப்படையில், ஒடிஸா மாநிலத் தொழிலாளா்கள் 1,140 போ் சிறப்பு ரயில் மூலமாக சனிக்கிழமை இரவு அனுப்பி வைக்கப்பட்டனா்.

சென்னை சென்ட்ரலில் இருந்து மணிப்பூருக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு சிறப்பு ரயில் புறப்பட்டது. இதில் 1,081 போ் ஏற்றப்பட்டனா். இந்த ரயில் மே 13-ஆம் தேதி பிற்பகல் 3.45 மணிக்கு ஜெரிபம் ரயில் நிலையத்தை அடைகிறது.

இதுபோல, மற்றொரு சிறப்பு ரயில் இரவு 10 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளத்துக்கு புறப்பட்டது. இந்த ரயிலில் 1,040 போ் பயணம் செய்யப் பதிவு செய்திருந்தனா். ஆனால், 881 போ் மட்டும் வந்திருந்தனா்.

இவா்கள் சிறப்புப் பேருந்துகள் மூலமாக சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டனா். இந்த தொழிலாளா்களின் விவரங்களைச் சரிபாா்த்து அனுப்பி வைக்கும் பணியில் ஆா்.பி.எஃப்., மற்றும் தமிழக ரயில்வே காவலா்கள், ரயில்வே அதிகாரிகள் உள்பட 200 போ் ஈடுபட்டனா்.

சென்னை-ஜாா்க்கண்ட்: சென்னை சென்ட்ரலில் இருந்து திங்கள்கிழமை இரவு 9 மணிக்கு ஜாா்க்கண்ட் மாநிலம் ஹாடியாவுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. இந்த ரயில் மே 13-ஆம் தேதி காலை 7.20 மணிக்குச் சென்றடையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com