குமரியில் கரோனாவால் பாதிக்கப்பட்ட முதியவர் பலி

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 63 வயது முதியவர் உயிரிழந்த நிலையில் அவருக்கு நடந்த பரிசோதனையில்
குமரியில் கரோனாவால் பாதிக்கப்பட்ட முதியவர் பலி

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 63 வயது முதியவர் உயிரிழந்த நிலையில் அவருக்கு நடந்த பரிசோதனையில் கரோனா தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதற்கிடையே ஆம்புலன்சில் அவருடன் வந்த அவரது மகள் தனிமைப்படுத்தப்பட்டார்.  

குமரி மாவட்டம் மயிலாடியைச் சேர்ந்த 63 வயது முதியவர் ஒருவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சென்னையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் இருந்ததால் சொந்த ஊருக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க உறவினர்கள் முடிவு செய்தனர். 

இதன்படி கடந்த 9ஆம் தேதி அவர் ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வரப்பட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் அவர் 9 ஆம் தேதி இரவு உயிரிழந்தார். அவர் இறப்பதற்கு முன்பு எடுக்கப்பட்ட ரத்தம் மற்றும் சளி மாதிரி பரிசோதனை முடிவுகள் வருவதற்காக அவரது சடலம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டிருந்தது. 

இந்தநிலையில் திங்கள்கிழமை அவரது ரத்த மாதிரி பரிசோதனை முடிவுகள் வந்தன. இதில் உயிரிழந்த முதியவருக்கு கரோனா இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினருக்கு சளி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் யாருக்கும் கரோனா தொற்று இல்லை. எனினும் ஆம்புலன்சில் முதியவருடன் வந்த அவரது மகள் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டுத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். 

இதைத் தொடர்ந்து முதியவரின் சடலம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு சொந்தமான புளியடியில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. குமரி மாவட்டத்தில் கரோனாவால் பலியான முதல் நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com