சாரம் அகற்றப்பட்டு முழுத் தோற்றத்துடன் காட்சியளிக்கும் பெரியகோயில் கோபுரம்

தஞ்சாவூர் பெரிய கோயிலில் கட்டப்பட்டிருந்த சாரம் அகற்றப்பட்டதால், தற்போது கோபுரங்களை முழுத் தோற்றத்துடன் காண முடிகிறது.
சாரம் அகற்றப்பட்டு முழுத் தோற்றத்துடன் காட்சியளிக்கும் பெரியகோயில் கோபுரம்

தஞ்சாவூர் பெரிய கோயிலில் கட்டப்பட்டிருந்த சாரம் அகற்றப்பட்டதால், தற்போது கோபுரங்களை முழுத் தோற்றத்துடன் காண முடிகிறது.

உலகப் பாரம்பரிய சின்னமாகவும், ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக தமிழர்களின் கட்டடக் கலைக்கு எடுத்துக்காட்டாகவும் திகழும் தஞ்சாவூர் பெரியகோயிலில் பிப். 5-ம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதையொட்டி, இக்கோயிலில் உள்ள கேரளாந்தகன் வாயில் கோபுரம், ராஜராஜன் வாயில் கோபுரம், விமானம் (பெரிய கோபுரம்), அம்மன் சன்னதி கோபுரம் உள்ளிட்ட சன்னதிகளின் கோபுரங்களில் சாரம் கட்டப்பட்டு, திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

குடமுழுக்கு விழாவுக்குப் பிறகும், கோபுரங்களில் கட்டப்பட்ட சாரம் தொடர்ந்து இருந்தது. இதனால், கோபுரத்தின் அழகை மக்களால் முழுமையாகப் பார்த்து ரசிக்க முடியவில்லை. மேலும், தொலைவிலிருந்து பார்த்தாலும், சாரம் கட்டப்பட்டிருந்ததால், கருப்பு நிறத்தில் காணப்பட்டது. இதனிடையே, கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக மற்ற கோயில்கள் மூடப்பட்டதை போல, இக்கோயிலும் மூடி வைக்கப்பட்டது. 

பொது முடக்கம் காரணமாகச் சாரத்தை அகற்றுவதற்கும் தொழிலாளர்கள் வரவில்லை. பொது முடக்கத்தில் தளர்வு ஏற்பட்டதைத் தொடர்ந்து, தொழிலாளர்கள் வந்ததால், கோபுரங்களிலிருந்த சாரம் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில், சாரம் முழுமையாக அகற்றப்பட்டதைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை முதல் பெரியகோயில் கோபுரங்களின் அழகை முழுமையாகக் காண முடிகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com