தஞ்சையில் மழை

தஞ்சாவூரில் நீண்ட நாள்களுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை பகலில் லேசான தூறல் விழுந்தது.
தஞ்சையில் மழை

தஞ்சாவூரில் நீண்ட நாள்களுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை பகலில் லேசான தூறல் விழுந்தது.

மாவட்டத்தில் சில இடங்களில் அவ்வப்போது கோடை மழை பெய்தது. ஆனால், தஞ்சாவூரில் நீண்ட நாள்களாக மழை பெய்யவில்லை. இதனால், மாநகரில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவே இருந்து வந்தது.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை முதல் வானில் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இதைத் தொடர்ந்து சில நிமிடங்களுக்கு லேசான தூறல் விழுந்தது. வானில் தொடர்ந்து மேக மூட்டத்துடன் இருப்பதாலும், லேசான காற்று வீசுவதாலும், மாநகரில் வெப்பத் தாக்கம் குறைந்துள்ளது.

 திருவையாற்றில் பெய்த மழை
 திருவையாற்றில் பெய்த மழை

இதேபோல, பட்டுக்கோட்டை உள்ளிட்ட இடங்களிலும் லேசான தூறல் விழுந்தது.

மேலும், திருவையாறு உள்ளிட்ட இடங்களில் முற்பகல் 11.30 மணி முதல் சுமார் அரை மணி நேரத்துக்கு இடியுடன் கூடிய மழை பெய்தது. இதன் மூலம் அப்பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிர்ந்த நிலை ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com