சென்னைக்கு இரு தினங்கள் மட்டுமே ரயில் சேவை: தமிழக அரசு

தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியின் வலியுறுத்தலைத் தொடர்ந்து, சென்னைக்கு மே 14 மற்றும் மே 16 ஆகிய இரு தினங்கள் மட்டுமே ரயில் சேவை இயக்கப்படும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது.
சென்னைக்கு இரு தினங்கள் மட்டுமே ரயில் சேவை: தமிழக அரசு

தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியின் வலியுறுத்தலைத் தொடர்ந்து, சென்னைக்கு மே 14 மற்றும் மே 16 ஆகிய இரு தினங்கள் மட்டுமே ரயில் சேவை இயக்கப்படும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது.

இதுபற்றி தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்

"மத்திய ரயில்வே துறை, புதுடில்லி– சென்னை மற்றும் சென்னை– புதுடில்லி ராஜதானி எக்ஸ்பிரஸ் 13.5.2020 லிருந்து இயக்கப்படும் என்று அறிவித்து இருந்தது. நேற்று பிரதமர் தலைமையில் நடைபெற்ற காணொலி காட்சியின்போது, தமிழ்நாடு முதல்வர் 31.5.2020 வரை வழக்கமாக இயக்கப்படும் ரயில் சேவைகளை தொடங்காமலிருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். 

இருப்பினும், ஏற்கனவே முன் பதிவுசெய்யப்பட்ட காரணத்தால் இரு தினங்களில்(14.5.2020 மற்றும் 16.5.2020) ரயில் சேவைகள் இயக்கப்படும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது. இவ்விரு இரயில்கள் தவிர இதர வழக்கமான இரயில் சேவைகள் இயக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ராஜ்தானி ரயிலில் உள்ள அனைத்து பெட்டிகளும் குளிர் சாதன வசதி உள்ளதாகவும், ராஜ்தானி ரயிலில் சுமார் 1100 பயணிகள் வரை பயணம் செய்வர் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

குளிர் சாதன வசதி கொண்ட இந்த ரயில்கள் மூலம் நோய்தொற்று பரவ வாய்ப்பு உள்ளதாலும், சென்னைக்கு வரும் அனைத்து ரயில் பயணிகளையும் RT-PCR பரிசோதனை செய்து தான் தமிழ்நாட்டிற்குள் அனுப்பமுடியும் என்ற காரணத்தினாலும், 1000-க்கும் மேற்பட்ட பயணிகள் அனைவரையும் ஒரேநேரத்தில் பரிசோதிப்பதில் உள்ள நடைமுறை சிரமங்களையும் கருத்தில் கொண்டு, இந்த ரயில்கள் மூலம் வரும் பயணிகளை ரயில்வே துறை மூலமே தனிமைப்படுத்தி வைக்கவும், அவர்களுக்கு ஓரிரு நாளில் மாநில அரசின் மூலம் RT-PCR பரிசோதனை செய்யப்பட்டு, பரிசோதனை முடிவுகளை பெற்ற பின் தொற்று பாதித்தவர்களை மருத்துவமனைகளிலும், தொற்று இல்லாதவர்களை தனிமைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கும் வகையில் முதல்வர் மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் மத்திய ரயில்வே துறை அமைச்சருக்கும் கடிதம் எழுதியுள்ளார்கள்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com