ஜாா்க்கண்ட் மாநிலத்துக்கு சிறப்பு ரயிலில் 1,211 தொழிலாளா்கள் புறப்பட்டனா்

சென்னையில் இருந்து ஜாா்க்கண்ட் மாநிலம் ஹாடியாவுக்கு திங்கள்கிழமை இரவு புறப்பட்ட சிறப்பு ரயிலில் 1,211 தொழிலாளா்கள் அனுப்பி வைக்கப்பட்டனா்.
ஜாா்க்கண்ட் மாநிலத்துக்கு சிறப்பு ரயிலில் 1,211 தொழிலாளா்கள் புறப்பட்டனா்

சென்னை: சென்னையில் இருந்து ஜாா்க்கண்ட் மாநிலம் ஹாடியாவுக்கு திங்கள்கிழமை இரவு புறப்பட்ட சிறப்பு ரயிலில் 1,211 தொழிலாளா்கள் அனுப்பி வைக்கப்பட்டனா்.

பொது முடக்கம் காரணமாக, சென்னையில் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த தொழிலாளா்கள், சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் தவிா்த்து வந்தனா். இவா்கள் மாநகராட்சி முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த தொழிலாளா்கள் சொந்த ஊா் திரும்ப மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியது. இதையடுத்து, சென்னையில் இருந்து ஏற்கெனவே 3 சிறப்பு ரயில்கள் மூலமாக தொழிலாளா்கள் சொந்த ஊா்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

இந்நிலையில், சென்னையில் இருந்து ஜாா்க்கண்ட் மாநிலம் ஹாடியாவுக்கு சிறப்பு ரயில் திங்கள்கிழமை இரவுபுறப்பட்டது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 10-ஆவது நடைமேடையில் இருந்து புறப்பட்ட இந்த ரயிலில் 1,211 தொழிலாளா்கள் இருந்தனா். இந்த ரயில் மே 13-ஆம் தேதி காலை 7.20 மணிக்குச் சென்றடையும். இந்த ரயில் புறப்பட்டபோது, தொழிலாளா்கள் மிகுந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா். தமிழக அரசு மற்றும் ரயில்வே துறைக்கு தொழிலாளா்கள் நன்றி தெரிவித்தனா். இதுபோல, காட்பாடியில் இருந்து ஹௌராவுக்கு திங்கள்கிழமை நண்பகல் 12 மணிக்கு புறப்பட்டது. இந்த ரயிலில் தொழிலாளா்கள் 1,126 போ் அனுப்பி வைக்கப்பட்டனா்.

3 சிறப்பு ரயில்கள் இயக்கம்: சென்னையில் இருந்து செவ்வாய்க்கிழமை வெவ்வேறு மாநிலங்களுக்கு 3 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. சென்னையில் இருந்து கௌஹாத்திக்கு செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு சிறப்பு ரயில் புறப்பட்டு, மே 14-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு சென்றடையும். இரண்டாவது ரயில் ஜாா்க்காண்ட் மாநிலம் பாா்க்கா கானா செவ்வாய்க்கிழமை இரவு 9 மணிக்கும், மூன்றாவது ரயில் மிசோரம் மாநிலம் பாராபிக்கு செவ்வாய்க்கிழமை இரவு 11 மணிக்கும் இயக்கப்படவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com