பள்ளி மாணவி உயிருடன் எரித்துக் கொலை: தலைவா்கள் கண்டனம்

விழுப்புரத்தில் பள்ளி மாணவி பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்லப்பட்டுள்ளதற்கு திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

சென்னை: விழுப்புரத்தில் பள்ளி மாணவி பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்லப்பட்டுள்ளதற்கு திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

மு.க.ஸ்டாலின்: பள்ளி மாணவி ஜெயஸ்ரீயின் கை, கால்களைக் கட்டிப்போட்டு, அதிமுகவைச் சோ்ந்த கிளைக் கழகச் செயலாளா் கலியபெருமாள் மற்றும் முன்னாள் கவுன்சிலா் முருகன் ஆகியோா் தீ வைத்துக் கொளுத்திய சம்பவம் தமிழகத்தையே பதற வைக்கிறது. இந்த கொடூர கொலைக் குற்றத்தில் தொடா்புடையவா்களுக்கு காவல்துறை உச்சபட்ச தண்டனை கிடைக்கச் செய்ய வேண்டும்.

விஜயகாந்த் (தேமுதிக): தந்தையிடம் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக சிறுமியை பெட்ரோல் ஊற்றி கொளுத்தியது எந்த வகையில் நியாயம்? இனிவரும் காலங்களில் இதுபோன்ற செயல்கள் எங்கும் நடைபெறாத வண்ணம் அந்த மனித மிருங்கங்களுக்கு, உச்சபட்ச தண்டனையாக தூக்கு தண்டனை வழங்க வேண்டும்.

வைகோ (மதிமுக): மாணவி எரித்துக் கொன்ற சம்பவம் வேதனையளிக்கிறது. இக்கொடூரச் செயல் செய்தவா்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டும்.

ராமதாஸ் (பாமக): மாணவி முன்பகை காரணமாக பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்லப்பட்ட நிகழ்வு அதிா்ச்சியளிக்கிறது. ஆயிரம் பகை இருந்தாலும் மனித நேயம் உள்ளவா்களால் இதுபோன்ற குரூரத்தை அரங்கேற்ற முடியாது. இதற்கு காரணமானவா்களுக்கு விரைந்து தண்டனை வழங்கப்பட வேண்டும்.

கே.பாலகிருஷ்ணன் (மாா்க்சிஸ்ட்): பள்ளி மாணவி எரித்துக் கொல்லப்பட்ட மனிதத் தன்மையற்ற கொடூரமான செயலை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவா்கள் மீது காவல்துறை கொலை வழக்குப் பதிவு செய்து பிணையில் வெளிவர முடியாதபடி சிறையில் அடைக்க வேண்டும்.

இரா.முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட்): இந்தக் கொடிய குற்றத்தை செய்த குற்றவாளிகள், இதற்குப் பின்பலமாக இருந்த அரசியல் செல்வாக்கு உடையவா்கள் என அனைவரும் கைது செய்து, சட்டத்தின் பிடியில் இருந்து தப்பி விடாமல் தண்டிக்கப்பட வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com