உச்ச நீதிமன்ற உத்தரவு கிடைத்த பிறகே டாஸ்மாக் திறப்பு குறித்து முடிவு: அமைச்சர் தங்கமணி

டாஸ்மாக் கடைகள் திறப்பு தொடர்பாக நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்துக்கள் குறித்து முழுமையாகத் தெரியவில்லை அவை தெரிந்த பின்பு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்துள்ள
நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட அமைச்சர்கள் பி. தங்கமணி, வெ. சரோஜா.
நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட அமைச்சர்கள் பி. தங்கமணி, வெ. சரோஜா.

டாஸ்மாக் கடைகள் திறப்பு தொடர்பாக நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்துக்கள் குறித்து முழுமையாகத் தெரியவில்லை அவை தெரிந்த பின்பு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்துள்ளார். 

நாமக்கல் மாவட்டம் கரோனா தொற்று இல்லாத மாவட்டமாக மாறியதைத் தொடர்ந்து, அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளுடன் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி. தங்கமணி, சமூக நலத்துறை அமைச்சர் வெ. சரோஜா ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினர். 

இதனைத்தொடர்ந்து, அமைச்சர் பி. தங்கமணி செய்தியாளர்களிடம் கூறியது: 

தமிழக முதல்வர் உத்தரவின்படி, நாமக்கல் மாவட்டத்தில் விசைத்தறி கூடங்கள், வணிக நிறுவனங்கள், சிறு கடைகள் திறக்கப்பட்டுள்ளன. அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு கரோனா தொற்று பரவாதவாறு அந்தந்த தொழில் நிறுவனத்தினர், கடை உரிமையாளர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு விதிகளை மீறிச் செயல்பட்டால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மூடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். 

கடந்த 4 நாட்களாக நாமக்கல் மாவட்டத்தில் எவ்வித நோய்த் தொற்றும் இல்லை. குடிமராமத்து பணிகளுக்காக 13 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதற்காக ரூ 8.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகள் திறப்பது தொடர்பான நீதிமன்ற கருத்துக்கள் பற்றித் தெரியவில்லை. மாவட்ட பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்திலிருந்ததால் அதுபற்றிய முழுமையான விவரம் தெரியவில்லை. தற்போது கோடைக் காலமாக இருப்பதால் மாவட்டத்தில் ஆங்காங்கே சற்று குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. 

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளேன். தண்ணீர் தட்டுப்பாடு உள்ள இடங்களில் லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யவும் அறிவுறுத்தி உள்ளேன். மின்கட்டணத்தைப் பொருத்தவரை மே 22-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மே 17 க்கு பின் வெளியாகும் அறிவிப்பின் அடிப்படையில் மின்கட்டண மாற்றம் தொடர்பான தகவல்கள் தெரிவிக்கப்படும். 

தமிழக அரசு பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை இரண்டு மாத காலத்திற்கு விலையின்றி வழங்க உத்தரவிட்டுள்ளது. மக்களைப் பாதுகாக்கும் வகையிலான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com