சென்னையில் கரோனா பாதிப்பு 6 ஆயிரத்தை நெருங்குகிறது: மாவட்டவாரியாக விவரம்

சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6ஆயிரத்தை நெருங்குகிறது. 
சென்னையில் கரோனா பாதிப்பு 6 ஆயிரத்தை நெருங்குகிறது: மாவட்டவாரியாக விவரம்

சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6ஆயிரத்தை நெருங்குகிறது. 

கரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. ஒரு புறம் அந்நோய்த் தொற்றை தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் வேளையில், மற்றொரு புறம், பரிசோதனைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. 

இந்த நிலையில் தமிழகத்தில் இன்று மேலும் 434 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் நோய்த் தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை 10,108-ஆக அதிகரித்துள்ளது. நோய்த்தொற்று ஏற்பட்டவா்களில் இதுவரை 71 போ் பலியாகியுள்ளனா்.

இன்று 359 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதுவரை மொத்தம் 2,599 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். சென்னையில் மட்டும் இன்று 310 பேருக்கு தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் தொற்று எண்ணிக்கை 5947 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் 2ஆவது நாளாக கரோனா பாதிப்பு எண்ணிக்கை 500க்கு கீழ் குறைந்துள்ளது. முன்னதாக நேற்று 477 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

மாவட்ட வாரியாக கரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை:-

அரியலூர் - 348
செங்கல்பட்டு - 450
சென்னை - 5,946
கோவை - 146
கடலூர் - 416
தர்மபுரி - 5
திண்டுக்கல் - 114
ஈரோடு - 70
கள்ளக்குறிச்சி - 61
காஞ்சிபுரம் - 176
கன்னியாகுமரி - 35
கரூர் - 56
கிருஷ்ணகிரி - 20
மதுரை - 143
நாகை - 47
நாமக்கல் - 77
நீலகிரி - 14
பெரம்பலூர் - 139
புதுக்கோட்டை - 7
ராமநாதபுரம் - 31
ராணிப்பேட்டை - 78
சேலம் - 35
சிவகங்கை - 13
தென்காசி - 56
தஞ்சாவூர் - 71
தேனி - 78
திருப்பத்தூர் - 28
திருவள்ளூர் - 516
திருவண்ணாமலை - 140
திருவாரூர் - 32
தூத்துக்குடி - 48
திருநெல்வேலி - 136
திருப்பூர் - 114
திருச்சி - 67
வேலூர் - 34
விழுப்புரம் - 306
விருதுநகர் - 46
விமான நிலைய தனிமைப்படுத்தல் - 9

மொத்தம் - 10,108

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com