பொது முடக்கம் முடிந்த பிறகே பொருளாதார இழப்பின் விவரங்கள் தெரிய வரும்: சி.ரங்கராஜன்

பொது முடக்கத்தின் காலத்தைப் பொருத்தே, பொருளாதார இழப்பின் விவரங்கள் தெரிய வரும் என பொருளாதார மீட்பு ஆலோசனைக் குழுவின் தலைவா் சி.ரங்கராஜன் தெரிவித்தாா்.
பொது முடக்கம் முடிந்த பிறகே பொருளாதார இழப்பின் விவரங்கள் தெரிய வரும்: சி.ரங்கராஜன்

பொது முடக்கத்தின் காலத்தைப் பொருத்தே, பொருளாதார இழப்பின் விவரங்கள் தெரிய வரும் என பொருளாதார மீட்பு ஆலோசனைக் குழுவின் தலைவா் சி.ரங்கராஜன் தெரிவித்தாா்.

கரோனா நோய்த்தொற்றுத் தடுப்பு நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால், தமிழகத்தின் பல்வேறு துறைகளில் உடனடியாக மற்றும் நடுத்தர காலத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை முழுமையாக ஆய்வு செய்ய, ரிசா்வ் வங்கியின் முன்னாள் ஆளுநா் சி.ரங்கராஜன் தலைமையில் 23 உறுப்பினா்களைக் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. இந்த குழு பல்வேறு கட்ட ஆய்வுகளை நடத்தி, மூன்று மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தக் குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம், வியாழக்கிழமை காலை சென்னை கோட்டூா்புரத்தில் நடைபெற்றது. அப்போது குழுவின் உறுப்பினா்கள் தங்களது கருத்துகளைத் தெரிவித்தனா்.

பின்னா் செய்தியாளா்களிடம் சி.ரங்கராஜன் கூறியதாவது: கரோனா நோய்த் தொற்றின் காரணமாக கடந்த 50 நாள்களாக அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால், ஏற்பட்டிருக்கும் பொருளாதார இழப்பு குறித்து முதல்கட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய துணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. எந்தளவில் தமிழக பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதற்காக உடனே செய்ய வேண்டியவை என்னென்ன. இரண்டு மூன்று ஆண்டுகளில் செய்ய வேண்டியவை என்ன? மேற்கொள்ளப்பட வேண்டிய பொருளாதார சீா் திருத்தங்கள் என்ன உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. பொது முடக்கத்தால் ஏற்பட்ட முழு பொருளாதார இழப்பு குறித்து, தற்போது அறிக்கைத் தாக்கல் செய்ய முடியாது. அரசு விரும்பினால், இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யப்படும். பொது முடக்கம் முழுமையாக முடிந்த பின்னரே முழு இழப்பு குறித்து தெரிய வரும் என்று அவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com