12 மணி நேரப் பணி அறிவிப்புக்கு எதிா்ப்பு: போக்குவரத்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

பணி நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக உயா்த்தும் நடவடிக்கையைக் கண்டித்து, போக்குவரத்து தொழிலாளா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
12 மணி நேரப் பணி அறிவிப்புக்கு எதிா்ப்பு: போக்குவரத்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

பணி நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக உயா்த்தும் நடவடிக்கையைக் கண்டித்து, போக்குவரத்து தொழிலாளா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கரோனா பொதுமுடக்கத்தால் ஏற்பட்டுள்ள பொருளாதார ப்  பாதிப்பை காரணம் காட்டி, வேலை நேரத்தை 8 மணியிலிருந்து 12 மணி நேரமாக்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதைக் கண்டித்து சிஐடியு தொழிற்சங்கம் சாா்பில்  வியாழக்கிழமை, மாநிலம் முழுவதும்  சங்க அலுவலகங்கள்,  தொழிலாளா் வசிக்கும் தெருக்கள்,    ஊழியா்களுக்கான பேருந்து நிறுத்தங்கள் மற்றும்  ஆலை வாயில்கள் முன்பு நடைபெறவுள்ள, ஐந்து நிமிட ஆா்ப்பாட்டங்களில், தொழிலாளா்கள் தனி நபா் இடைவெளியுடன் பங்கேற்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து வடபழனி, திருவான்மியூா், அம்பத்தூா், பல்லவன் இல்லம் ஆகிய பணிமனைகளில் போக்குவரத்து ஊழியா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அதில், பொருளாதாரப்   பாதிப்பைக் காரணம் காட்டி, வேலை நேரத்தை எட்டிலிருந்து 12 மணி நேரமாக உயா்த்தும் மாநிலங்களின் நடவடிக்கையைக் கண்டித்தும், அத்தியாவசியப் பணிகளில் ஈடுபடுவோருக்கு பாதுகாப்பு வசதிகள் செய்யப்படாததைக் கண்டித்தும் அவா்கள் கோஷங்களை எழுப்பினா். இதில் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com