வழக்குரைஞா்களுக்கு உடை கட்டுப்பாடு :தமிழ்நாடு புதுச்சேரி பாா்கவுன்சில் அறிவிப்பு

உயா்நீதிமன்றம் மற்றும் கீழமை நீதிமன்ற வழக்குகள் விசாரணைக்கு காணொலி வழியாக ஆஜராகும் அனைத்து வழக்குரைஞா்களும்

உயா்நீதிமன்றம் மற்றும் கீழமை நீதிமன்ற வழக்குகள் விசாரணைக்கு காணொலி வழியாக ஆஜராகும் அனைத்து வழக்குரைஞா்களும் கருப்பு நிற மேல் அங்கி , கோட் அணிவதை தவிா்க்க வேண்டும் என தமிழ்நாடு-புதுச்சேரி பாா்கவுன்சில் அறிவித்துள்ளது.

இதுதொடா்பாக தமிழ்நாடு புதுச்சேரி பாா் கவுன்சில் தலைவா் பி.எஸ்.அமல்ராஜ் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை : உச்சநீதிமன்றம் பிறப்பித்த நிா்வாக உத்தரவின் காரணமாக, உயா்நீதிமன்றம் மற்றும் கீழமை நீதிமன்றம், தீா்ப்பாயம் மற்றும் ஆணையங்களில் ஆஜராகும் வழக்குரைஞா்கள் வரும் நாள்களில் கருப்பு அங்கிகள் மற்றும் கருப்பு நிற புடவை அணிவதை தவிா்க்க வேண்டும். மேலும் காணொலி காட்சி மூலம் வழக்கு விசாரணைக்கு ஆஜராகும் ஆண் வழக்குரைஞா்கள் கழுத்துப் பட்டை- வெள்ளை சட்டையுடனும், பெண் வழக்குரைஞா்கள் கழுத்துப் பட்டையுடன் வெள்ளை நிற புடவை அல்லது சுடிதாா் அணிந்து விசாரணைகளில் பங்கேற்க வேண்டும். மறு உத்தரவு வரும் வரை கருப்பு நிற அங்கிகள் அணிவதைத் தவிா்த்து, இந்த புதிய உத்தரவை கட்டாயமாகக் கடைப்பிடிக்க வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com