தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் நாளை திறக்கப்படுகின்றன: டாஸ்மாக் நிர்வாகம்

தமிழகத்தில் நாளை முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் நாளை திறக்கப்படுகின்றன: டாஸ்மாக் நிர்வாகம்

சென்னை: உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்திருப்பதை அடுத்து, தமிழகத்தில் நாளை முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்த உச்ச நீதிமன்றம், தமிழகத்தில் மதுக்கடைகளைத் திறக்க அனுமதி வழங்கியுள்ளது.

இதையடுத்து, தமிழகத்தில் சனிக்கிழமை முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வாங்க ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கலரில் டோக்கன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

அதன்படி, ஞாயிற்றுக்கிழமை முதல் சனிக்கிழமை வரை ஒவ்வொரு நாளும் சிவப்பு, மஞ்சள், பச்சை, நீலம் உள்ளிட்ட 7 வண்ணங்களில் டோக்கன் வழங்கப்படும். டோக்கனில் குறிப்பிடப்படும் நேரத்தில் மட்டுமே மதுபானம் வழங்கப்படும். டாஸ்மாக் கடைகளில் கூட்டம் கூடாதவண்ணம், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் நோக்கிலும் டாஸ்மாக் நிர்வாகம் இந்த ஏற்பாட்டினைச் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூடுமாறு சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்துள்ள உச்ச நீதிமன்றம் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூடுமாறு சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், டாஸ்மாக் கடைகளைத் திறக்க அனுமதி வழங்கியது.

மேலும், ஒரு மாநிலத்தில் மது விற்பனை செய்வது தொடர்பான விதிகளை உருவாக்கும் அதிகாரம் மாநில அரசுக்கே உள்ளது. அதில் நீதிமன்றங்கள் தலையிட தேவையில்லை. எனவே, மதுபானம் விற்பனை தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த நிபந்தனைகள் அனைத்தையும் தளர்த்துவதாகவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், மதுவாங்க வருவோர், ஆதார் கொண்டு வர வேண்டும், சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என அனைத்து நிபந்தனைகளயும் தமிழக அரசு சார்பில் பிறப்பிக்கப்பட  வேண்டுமே தவிர, நீதிமன்றம் பிறப்பிக்கக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com