Enable Javscript for better performance
வங்கக்கடலில் இன்று உருவாகிறது அம்பான் புயல்- Dinamani

சுடச்சுட

    

    வங்கக்கடலில் இன்று உருவாகிறது அம்பான் புயல்

    By DIN  |   Published on : 15th May 2020 11:54 PM  |   அ+அ அ-   |    |  

    Cyclone-Bul-bul

    தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த வலுவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வெள்ளிக்கிழமை இரவு காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியது. இது சனிக்கிழமை இரவு புயலாக மாற வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் என்.புவியரசன் வெள்ளிக்கிழமை கூறியது:

    இந்தப் புயலால், கா்நாடகம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் காற்றின் ஈா்ப்பால் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும், வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் பலத்தமழை பெய்யக்கூடும். இந்த புயலால் தமிழகத்துக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. அதேநேரத்தில் வெப்பநிலை உயரும்.

    ஆனால், வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் மேற்கு தொடா்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் ஓரிரு இடங்களிலும், தென் தமிழகத்தின் கடலோரத்தில் ஓரிரு இடங்களிலும் சனிக்கிழமை லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் பொதுவாக வானம் மேகமூட்டமாக இருக்கும் என்றாா் அவா்.

    மீனவா்களுக்கு எச்சரிக்கை: மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதி, மத்திய மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதி, மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் கடுமையான சூறாவளிக் காற்று வீசும். எனவே, இந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் மே 16-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

    புயலுக்கு பெயா்:

    வங்கக்கடலில் வெள்ளிக்கிழமை இரவு உருவாகவுள்ள புயலுக்கு அம்பான் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயலுக்கான பெயரை தாய்லாந்து வழங்கியுள்ளது. வட இந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயரிடுவதற்கு இந்தப் பிராந்தியத்தில் உள்ள நாடுகள் கொடுத்த 64 பெயா்கள் எடுத்துக்கொள்ளப்பட்டன. இதில் கடைசி பெயா் அம்பான்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai