அபுதாபியில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள் விடியோ வெளியீடு

அபுதாபியில் சிக்கித் தவிக்கும் தமிழகர்கள் விடியோ ஒன்றை கட்செவி அஞ்சலில் பதிவு செய்து இங்குள்ள நண்பர்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அபுதாபியில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள் விடியோ வெளியீடு

அபுதாபியில் சிக்கித் தவிக்கும் தமிழகர்கள் விடியோ ஒன்றை கட்செவி அஞ்சலில் பதிவு செய்து இங்குள்ள நண்பர்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அரபு நாடுகள் பலவற்றிலும் கட்டுமானம் உள்ளிட்ட பணிகளுக்காகத் தமிழர்கள் ஆயிரக்கணக்கானோர் சென்று வருகின்றனர். அந்தவகையில் உலக நாடுகளை நிலை குலையச் செய்திருக்கும் கரோனா வைரஸ் தாக்குதலால் உலகின் பலநாடுகளில் விமானப் போக்குவரத்து கடந்த 4 மாதங்களாக முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆயிரக்கணக்கான தமிழ் தொழிலாளர்கள் பணி முடிந்தும் நாடு திரும்ப முடியாமல் சிக்கித் தவிக்கின்றனர்.

வெளிநாடுகளில் உள்ளோர் விமானம் மூலம் அழைத்துவரப்படுவர் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கானோர் முன்பதிவு செய்ய, கடந்த இரு நாட்களில் அபுதாபியிலிருந்து வெறும் 200 பேர் மட்டுமே அழைத்து வர டிக்கெட் உறுதியாகி இருக்கிறது என்கிறார்கள். இதே வேகத்தில் வெளிநாடுகளில் உள்ளோரை அழைத்து வரும் முயற்சிகள் நடைபெற்றால் மொத்த பணியாளர்களையும் முழுமையாகக் கொண்டு வந்து சேர்க்க சில ஆண்டுகள் பிடிக்கலாம் என வருந்துகிறார்கள்.

இப்போதைக்குக் கிடைக்கும் தங்குமிடம், உணவு போன்றவை எத்தனை காலத்துக்குக் கிடைக்கும் என்ற அச்சமும் இவர்களிடம் காணப்படுகிறது. இந்த நிலையில் அபுதாபியிலுள்ள ஒரு கேம்பில் ஒரு நிறுவனம் சார்பில் தங்க வைக்கப்பட்டுள்ளோர் ஒரு விடியோவை கட்செவி அஞ்சலில் பதிவு செய்து இங்குள்ள நண்பர்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர். அந்த விடியோவில் 'வெளிநாடுகளிலிருந்து வருவோர் அனைவருக்கும் நோய்த் தொற்று இருக்கும் என எண்ணி எங்களைப் புறக்கணிக்காதீர்; முழுமையாக மருத்துவப் பரிசோதனைக்கும் சிகிச்சைக்கும் உட்படுத்திக் கொள்ளத் தயார்' எனவும் அந்த விடியோவில் அறிவித்துள்ளனர்.

இதேபோன்ற விடியோக்களை மற்ற முகாம்களில் உள்ளோரும் பதிவு செய்து அனுப்பவுள்ளனர். மேலும் இந்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் கோரிக்கை மனுக்களும் மின்னஞ்சல் வழியாக அவர்கள் அனுப்பியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com